30000 பேர் பணிநீக்கம்.. அச்சத்தில் இந்திய ஊழியர்கள்..!

உலக நாடுகளில் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்லும் வேளையில் வல்லரசு நாடுகள் அனைத்தும் அச்சத்திலேயே உள்ளது. இதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கத் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள, வேலையின்மை காரணமாக அரசிடம் உதவித் தொகை கோருவோர் எண்ணிக்கை 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா தான் அடுத்த ஐரோப்பா.. கனவு திட்டத்தை தீட்டும் ரஷ்யா..! பொருளாதாரம் மந்த நிலை இதற்கிடையில் பொருளாதாரம் … Read more

பெண்கள் ‘அந்த’ நாட்களில் ஊறுகாய் தொடக் கூடாது; காரணம் இதுதான்! 

அந்த காலத்தில்  மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஊருகாய்யை தொடக்கூடது என்று வழக்கம் இருந்தது. இந்நிலையில் இன்றும் சில வீடுகளில் அந்த பழக்கம் பின்பற்றபடுகிறது. உணவை புனிதமாக பார்ப்பதால், மாதவிடாய் காலங்களில் பெண்கள் உணவு பொருட்களை தொடக்கூடாது என்று கூறப்பட்டது. இது ஒரு பழைய வழக்கம் என்றாலும் இன்னும் பல வீடுகளில் இது பின்பற்றபடுகிறது. பாரம்பரியம் என்பது கேள்வி கேட்கப்படாமல் பின்பற்றுவது என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் செயலாகவே இது பலரால் பார்க்கப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் … Read more

ஏசி வெடித்து தீ விபத்து; உடல் கருகி பலியான பால் வியாபாரி! – சென்னையில் சோகம்

சென்னை, கொளத்தூர் மணவாளன் தெருவைச் சேர்ந்தவர் ஷியாம். இவர் அந்தப் பகுதியில் பால் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். இவருக்குக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் என்பதால், ஷியாமின் மனைவி அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஷியாம் இந்த நிலையில், ஷியாம் வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள அறையில் ஏசியை போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். திடீரென இரவு பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. அதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாகக் கீழே வந்து பார்த்தபோது, கீழ்த்தளத்தில் … Read more

மோசமான நிலையில் பள்ளிக் கட்டிடம்: நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

சென்னை: படவட்டம்மன் கோவில் தெருவில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இதில், ஒரு சில விபத்துகளில் மரணங்களும் பதிவாகிறது. குறிப்பாக பள்ளிக் கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நெல்லையில் தனியார் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் … Read more

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணையராக நியமனம்

புதுடெல்லி: டெல்லி காவல் துறைக்கு புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய படையில் முக்கிய பங்காற்றியவர். ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் அரோரா, 1988-ல் ஐபிஎஸ் முடித்து தமிழ்நாடு பிரிவின் அதிகாரியாக பணியாற்றினார். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர். இந்தோ – திபெத் எல்லை படையின் (ஐடிபிபி) இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது டெல்லி காவல் துறை ஆணையராக நேற்று நியமிக்கப்பட்டார். அந்தப் … Read more

முன்னாள் முதல்வர் என்டிஆர் மகள் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் இளைய மகள் கந்தமனேனி உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், மறைந்த பிரபல நடிகருமான என்.டி.ராமா ராவின் இளைய மகள், கந்தமனேனி உமா மகேஷ்வரி, தெலங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து … Read more

'இது சரியான நேரம் அல்ல' – கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிபர் ரணில் வார்னிங்!

“நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை” என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தை கண்டு மாலத்தீவு நாட்டிற்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, பிறகு அங்கிருந்து, சிங்கப்பூர் நாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார். தொடர்ந்து, இலங்கை … Read more

BSNL புத்துயிரூட்டும் நிதி..! மத்திய அரசு அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் புத்துயிரூட்ட ஒரு இலட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவது அதன் சேவைத் தரத்தை உயர்த்தவும், கடன் சுமையைக் குறைக்கவும், கண்ணாடி இழை வலையமைப்பை விரிவாக்கவும் உதவும் எனத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல்லின் வருவாயில் 80 விழுக்காடு ஊதியத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் செலவிடப்பட்டு வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஊழியர்களின் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் நட்டம் பாதியாகக் … Read more

தினேஷ் கார்த்திக் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது…பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பரபரப்பு கருத்து!

பாகிஸ்தானில் தினேஷ் கார்த்திக் பிறந்திருந்தால் அவரது வயதிற்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலமான் பட் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய கம்பேக் செய்ததுடன் தற்போது அணியின் தவிர்க்க முடியாத இடத்தையும் 37 வயதான தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார். அணிக்காக போட்டியை வெற்றிகரமாக முடித்து தரும் இடத்தில் ஃபினிஷராக களமிறங்கி தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உதாரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு … Read more

தோல் கழலை நோயாபல் 1200 மாடுகள் உயிரிழப்பு; குஜராத்தில் கொத்து கொத்தாக மடியும் மாடுகள்…!

ஆமதாபாத்: குஜராத்தில் கால்நடைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease)  வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கொத்து கொத்தாக மாடுகள், ஆடுகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 1200 மாடுகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பிட்ட  7 மாவட்டங்களில் நோயின் தாக்கம் தீவிரமாக பரவி வருவதாகவும் இதனால், ஆங்காங்கே … Read more