அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை பகுதியில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை பகுதியில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மரத்தின் கீழ் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளனர்.

திருப்பதி மெய்நிகர் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி கோயிலில் 7-ம் தேதி முதல் 10 வரை மெய்நிகர் சேவை மூலம் தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சேவை டிக்கெட் முன்பதிவு செய்து தரிசன டிக்கெட்டுகள் பெறும் கோட்டா நாளை மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை சகஸ்ர தீப அலங்கரம் சேவைக்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.

பொள்ளாச்சி: போக்சோ வழக்கில் கைதான 2 ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல்

பொள்ளாச்சி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரு ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி பள்ளி முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், பள்ளியில் பணியாற்றும் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ’child help line 1098’க்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு குழு கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஜூலை 30ம் … Read more

ம.பி மருத்துவமனையில் தீவிபத்து – 10 பேர் உயிரிழப்பு; 3 பேர் கவலைக்கிடம்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவியிருக்கிறது. தீ கொளுந்துவிட்டு எரிவதால் முதற்கட்டமாக மருத்துவமனையிலுள்ள நோயாளிகளை வெளியே கொண்டுவரும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் 10 நோயாளிகள் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 10 தீயணைப்பு வாகனங்கள் … Read more

யானை படத்திற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு .. எதற்காக வழக்கு?

யானை படத்துக்கான சான்றிதழை எதிர்த்து தணிக்கை குழு முன் மேல்முறையீடு செய்ய அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், யானை திரைப்படத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாக காட்டியுள்ளதாகவும், மீனவர்களை கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் … Read more

தபால் வழியாக ராக்கி அனுப்ப சிறப்பு ஏற்பாடு| Dinamalar

பெங்களூரு : தபால் மூலம் ராக்கி அனுப்புவது அதிகரிக்கிறது. இம்முறை 5,000 ராக்கிகள் தபால் வழியாக அனுப்பப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.சகோதர, சகோதரிகளிடையே, பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை, வரும் 11ல் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள், தங்களின் சகோதரரின் கையில் ராக்கி கட்டுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவியதால், எந்த நிகழ்ச்சியும் சிறப்பாக கொண்டாடவில்லை. இவர்களின் வசதிக்காக, தபால் வழியாக ராக்கிகள் அனுப்ப கர்நாடக தபால்துறை வசதி செய்தது. இம்முறையும் ராக்கிகள், வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம். இதற்காக … Read more

பிரின்ஸ் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு

விஜய், தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் முதன்முறையாக பிரின்ஸ் என்கிற நேரடியாக தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜதி ரத்னாலு என்கிற படத்தை இயக்கிய கே.வி.அனுதீப் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரிஷபோப்ஷகா நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் என இருமொழி படமாக உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை கடந்த நான்கு நாட்களாக பூந்தமல்லி அருகே உள்ள … Read more

நிலமோசடி வழக்கில் கைதான சஞ்சய் ராவத்தின் குடும்பத்தினரை சந்தித்தார் – உத்தவ் தாக்கரே

மும்பை, சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி.யான சஞ்சய் ராவத் சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் நிலமோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அமலாக்க துறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அவரது வீட்டுக்கு, நேற்று காலை 7 மணியளவில் 20 முதல் 22 அதிகாரிகள் வரை சென்று நடத்திய சோதனையில், ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை அமலாக்க துறை அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் சஞ்சய் … Read more

செய்தியாளர் சந்திப்பின்போது மேஜை மீது ஏறி ஆட்டம்போட்ட வீராங்கனைகள் – சுவாரசிய நிகழ்வு…!

லண்டன், ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இங்கிலாந்து – ஜெர்மனி அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 56 ஆண்டு கால ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பின் இங்கிலாந்து பெண்கள் கால்பந்து அணியின் … Read more

உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவன தலைவர் ரஷிய தாக்குதலில் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 5 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் கோதுமை உள்ளிட்ட தானிய ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இந்த சூழலில், இரு நாடுகள் இடையேயான போரால் உணவு பொருட்களின் விலைவாசி உலக அளவில் உயர்ந்து உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் தெற்கு நகரான மிகோலைவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில், உக்ரைனின் ஹீரோ விருது வாங்கியுள்ள அந்நாட்டின் பணக்கார தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை … Read more