சீனாவின் அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்.. வங்கிகள் $350 பில்லியன் இழப்பினை காணலாம்.. ஏன் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம் இன்று ஆட்டம் கண்டு வருகின்றது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடான சீனா, சமீபத்திய ஆண்டுகளாகவே அடுக்கடுக்கான பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஒரு புறம் கொரோனா எனில், மறுபுறம் கொரோனாவினை விட மோசமான எவர்கிராண்டேவின் திவால் நிலை. இது சீனாவின் அஸ்திவாரத்தினையே ஒட்டுமொத்தமாக ஆட்டம் கான வைத்துள்ளது எனலாம். சீனா பொருளாதாரத்தினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகள்.. என்னென்ன தெரியுமா? கடனை கட்ட முடியாது? சீனாவின் … Read more

Explained: வருமான வரியை ஜூலை 31க்குள் தாக்கல் செய்யலீயா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது இதுதான்!

மாதாந்திர சம்பளம் வாங்கும் நபர்களுக்கு நடப்பாண்டில் (AY) 2022-23 (நிதியாண்டு (FY) 2021-22)க்கான வருமான வரிக் கணக்கை (ITRs) தாக்கல் செய்ய ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும். முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, அரசாங்கம் காலக்கெடுவை நீட்டிக்கவில்லை. மேலும் வருமான வரித் துறையானது ஐடிஆர்களை தாக்கல் செய்வது தொடர்பான சிக்கல்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் (FAQs) தொகுப்பை வெளியிட்டது. அதன்படி சம்பளம் பெறுபவர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். கார்ப்பரேட் … Read more

“பாகிஸ்தானைப் பாருங்கள்… பிரதமர் மோடியால்தான் உயிருடன் இருக்கிறீர்கள்!" – பீகார் அமைச்சர் பேச்சு

பிகார் மாநிலத்தில் வருவாய் மற்றும் நிலச்சீர்திருத்த அமைச்சராக இருப்பவர் ராம் சுரத் ராய். கடந்த மாதம், நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பணியிடமாற்றங்கள், பதவி உயர்வு ஆகியவை குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக அமைச்சர் கூறிய கருத்துகள் அந்த மாநிலத்தில் தலைப்புச் செய்திகளாக மாறின. அதைத் தொடர்ந்து, அக்னிபத் திட்டத்துக்கு எதிரானப் போராட்டத்தின்போது, ரயில்களுக்கு தீ வைத்தவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. Oh My God..“If all of you are alive … Read more

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரபாகரன் நியமனம்

சென்னை: திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பாபு மருத்துவ விடுப்பில் சென்றதை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் ஆணையராக பிரபாகரனை நியமித்த உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். டிஐஜி பதவியில் சென்னை மாநகார காவல் துறையில் கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருந்த பிரபாகரன், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். Source link

வாக்குறுதியை அரசு நிறைவேற்ற கோரி பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்

சண்டிகர்: மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பஞ்சாபில் விவசாயிகள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு, விவசாய சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு … Read more

சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல் – நீதிமன்றம் உத்தரவு!

பத்ரா சாவுல் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்தை, வரும் 4 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு, மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. 1,034 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக … Read more

OnePlus: பட்ஜெட் விலை ஒன்பிளஸ் இயர்பட்ஸ் அறிமுகம் – 20 மணிநேர பேட்டரி ஆயுள்; பாஸ் பூஸ்ட் டிரைவர் இருக்கு!

OnePlus Nord Buds CE True Wireless Earbuds: ஒன்பிளஸ் தனது நார்டு தொகுப்பில் பல சாதனங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் விலை விரும்பிகளை கவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதிய பட்ஜெட் விலை ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் CE ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ் பல அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது Nord பெயரின் கீழ் நிறுவனத்தின் இரண்டாவது TWS இயர்பட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகளவில் குறையும் வாய்ப்பு

கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட  உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.   எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் குறையும்..  இதன்படி, உணவங்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எரிவாயு விநியோகம் … Read more

கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த மீட்புக்குழுவினர்..!

மியான்மர் நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து, மலைப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாண்டலேயில் இருந்து கிழக்கே உள்ள Dat Taw Gaint நீர்வீழ்ச்சியில் தண்ணீர் சீறி பாய்கிறது. வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். Source link

தொழில் போட்டி காரணமாக ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொழில் போட்டி காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கூலிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். அங்குள்ள மாதாப்பூர் என்ற இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இஸ்மாயில் என்பவரை, அண்மையில் சிறையிலிருந்து வெளிவந்த சாதிக் பாட்சா மற்றும் கூட்டாளிகள் மூன்று பேர், வீட்டில் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே இஸ்மாயில் உயிரிழந்தார். காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய சாதிக் பாட்சா மற்றும் … Read more