ஜிம்முக்கு சென்ற கவுன்சிலர் மர்ம நபரால் சுட்டுக்கொலை!

இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் ஜிம்மில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், மலேர்கோட்லா மாவட்டத்தில் நகராட்சி கவுன்சிலராக பதிவு வகித்து வந்தவர் முகமது அக்பர். தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வருவதை அக்பர் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில், தனது பயிற்சியாளருடன் சேர்ந்து அக்பர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அக்பரை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு … Read more

கோவை செல்வராஜ், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்…

சென்னை: மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து இன்று தேர்தல் ஆணையர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒபிஎஸ் தரப்பில் கலந்துகொண்ட  கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தெரியவில்லை என்றும், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் இன்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்  இணைப்பு குறித்து தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. முதலில் … Read more

விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி திறப்பு

சென்னை: அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராஜ்பவனில் புகைப்பட கண்காட்சியை ஆளுநர் திறந்து வைத்தார். 

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

மத்தியபிரதேசம்: மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைக்குள் மேலும் பல நோயாளிகள் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தமிழகத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கொடிகட்டி பறக்கும் கேரளா லாட்டரி – கள ஆய்வில் பகீர் தகவல்கள்

கேரளா லாட்டரி பேஸ் புக், வாட்சப் என ஆனலைன் வாயிலாக அதிகப்படியாக தமிழகத்தில் விற்பனையாகிறது. இதுகுறித்து புதிய தலைமுறை மேற்கொண்ட கள ஆய்வில் கிடைத்த தகவல்களை தற்போது காணலாம். தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்று நம்பர் லாட்டரி, கேரளா லாட்டரிகளை மறைமுகமாக விற்பனை செய்வது என தமிழகத்தில் ஆங்காங்கே பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன்மீது தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. லாட்டரி தடைக்கு … Read more

’நாங்கள்தான் அதிமுக!’ – ஆலோசனை கூட்டத்தில் நடந்த கலாட்டா.. தேர்தல் அதிகாரி சொன்ன பதில்!

அதிமுக கட்சியின் தலைமை யார் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்க கூடிய நடவடிக்கை தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று காலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 11 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பாக இ.பி.எஸ் மற்றும் … Read more

தென் மாவட்டத்தில் கார்த்தியின் ‘விருமன்’ இசை வெளியீட்டு விழா – எங்கே, எப்போது தெரியுமா?

கார்த்தியின் ‘விருமன்’ இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளப் படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் … Read more

ம.பி., மருத்துவமனையில் தீ: 10 பேர் பலி| Dinamalar

போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் ஆபத்தான நிலையில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் … Read more

வலையில் சிக்கவைக்க முயற்சி ; உச்ச நீதிமன்றத்தில் திலீப் திடீர் மனு

பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ல் படப்பிடிப்பிலிருந்து திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கடத்தியவர்கள் அதை வீடியோவாகவும் பதிவு செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டு, நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திலீப் மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார். இது தவிர திலீப்பின் நண்பராக இருந்து அவருக்கு எதிராக திரும்பிய இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர், திலீப் விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சித்தார் என்றும் பாதிக்கப்பட்ட … Read more

சமூக வலைதளத்தை நம்பி ஏமாந்த சிறுமி 4 மாதத்தில் 3 முறை விற்பனை ; நூற்றுகணக்கான முறை பாலியல் பலாத்காரம்

கொல்கத்தா மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் அறிமுகமான நபரை நம்பி ஏமாந்தார். நான்கு மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் மூன்று முறை விற்பனை செய்யபட்டார். பலாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், மேலும் அவரை விட 30 வயது மூத்த ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்கபட்டார். இது தொடர்பான வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் ‘காதலன்’ ராகுல் உட்பட ஆறு … Read more