காமன்வெல்த்: பார்வையாளர்கள் அரங்கு மீது சைக்கிளுடன் மின்னல் வேகத்தில் பாய்ந்த வீரர்கள்…! – அதிர்ச்சி சம்பவம்

லண்டன், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, காமன்வெல்த் தொடரில் ஆண்கள் உள்அரங்கு சைக்கிளிங் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று லண்டன் லி வேலி விலொ பார்க்கில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில், இந்திய வீரர் விஷிஹவ்ஜூத் சிங் உள்பட 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பந்தைய ஓடுதளத்தை சைக்கிளிங் வீரர்கள் 10 சுற்றுகளாக கடக்க வேண்டும். … Read more

அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 7 பேர் காயம்

புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள் கூட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறை பரவியது. இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக உள்ளது என ஆர்லேண்டோ போலீஸ் தலைவர் எரிக் ஸ்மித் கூறியுள்ளார். துப்பாக்கி … Read more

சென்னை ராணுவ வீராங்கனை.. 27 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!

சென்னையை சேர்ந்த ராணுவ வீராங்கனை ஒருவர் தான் 27 ஆண்டுகளுக்கு முன் ராணுவப்பயிற்சி பெற்ற அதே இடத்தில் தன்னுடைய மகன் தற்போது பயிற்சி பெறுவதை கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவது என்பது பல இந்தியர்களுக்கு கனவாக இருந்து வரும் நிலையில் ராணுவத்தில் தாயும் மகனும் ஒரே இடத்தில் பயிற்சி பெறுவது என்பது மிகவும் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வாகும். அந்த வகையில் சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீராங்கனை மேஜர் ஸ்மிதா சதுர்வேதி அவர்களின் … Read more

TNPSC குரூப் 1 தேர்வில் 87% பெண்கள் வெற்றி: பிரமிக்க வைத்த மகளிர் சாதனை

TNPSC group 1 results 87% posts secured by girls: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வின் இறுதி பட்டியலில், தேர்ச்சி பெற்ற 66 பேரில் 57 பேர் பெண்கள் என்பது இன்ப அதிர்ச்சி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான தேர்வுகளும், தொழில்நுட்பம் மற்றும் துறை சார்ந்த பிற பணியிடங்களுக்கான … Read more

பாலி தீவு: புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து எரியூட்டும் வினோத விழா!

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள பதங்பாய் துறைமுகத்தின் கடற்கரையோரத்தில், இறந்து புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் வித்தியாசமான விழா கொண்டாடப்பட்டது. இறந்தவர்கள் எரிக்கப்படும்போது அவர்களின் ஆன்மா விடுதலையடைவதாகவும், அதனால் அவர்கள் வாழ்க்கையின் அடுத்த சுழற்சியைத் தொடங்க முடியும் எனவும் நம்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள், புதைத்த சடலங்களை சிறிது காலத்துக்குப் பிறகு தோண்டியெடுத்து எரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். தனித்தனியாக ஒவ்வொரு சடலமாக எரியூட்டினால் செலவு அதிகமாகும் என்பதால், சடலங்களை மொத்தமாக எரியூட்டுவதாகத் தெரிவிக்கிறார்கள் அந்த மக்கள். இந்த … Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க தி.மு.க. எதிர்ப்பு – அ.தி.மு.க. ஆதரவு..

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமனும், ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜும் கூட்டத்தில் பங்கேற்றனர். ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் கூட்டத்திற்கு வரும் முன், கோவை செல்வராஜ் அமர்ந்த நிலையில், அ.தி.மு.க. பெயர் பலகையை தங்கள் பக்கம் … Read more

தமிழகத்தில் 2-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு இல்லை: டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

தஞ்சை: தமிழகத்தில் தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு திட்டம் அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடவு, மே மாதம் தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும். இந்தப் பருவத்தில் நடவு செய்யப்படும் நெற்பயிர்கள், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யப்படும். அறுவடை நேரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது நெற்கதிர்கள் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகள் பெரும்பாலும் பயிர்க் காப்பீடு செய்வது வழக்கம். இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில … Read more

காங். எம்.பி.க்கள் 4 பேரின் சஸ்பெண்ட் வாபஸ்; சஞ்சய் ரவுத் கைது விவகாரத்தில் மாநிலங்களவை முடக்கம்

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இதனால் மக்களவை செயல்பாடு பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சீராகியுள்ளது. அமளி, சஸ்பெண்ட் உத்தரவு: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி ஒதுக்கீடு விவகாரம், அக்னி பாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். … Read more

1.59 மில்லி விநாடிகள்… ஜூலை 29-ல் 24 மணி நேரத்திற்கு முன்னரே சுழற்சியை நிறைவு செய்த பூமி

கடந்த 29 ஆம் தேதியன்று (ஜூலை 29) பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நமது பால்வளி அண்டத்தைப் பொறுத்தவரை பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதே ஒரு வருடமாக நாம் கணக்கில் எடுத்து கொள்கிறோம். சூரியனை சுற்றி வருவதுபோல பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற … Read more

காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து – மக்களவை சபாநாயகர் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர், வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி, அக்னிபத் திட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து, நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் … Read more