5G Auction: ஏர்டெல்லுக்கு இன்னும் தேவை… விடாமல் பிடிக்கும் ஜியோ!

5g Spectrum Auction Bidding Day 6: இந்தியாவில் நடந்துவரும் 5ஜி அலைக்கற்றுக்கான ஏலத்தின் ஆறாவது நாள் முடிவுகளை தொலைத்தொடர்பு துறை (DOT) வெளியிட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதியின் கணக்குப்படி, இதுவரை ரூ.1.50 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் 5G சேவைகளை வெளியிட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. இதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்றுடன் ஸ்பெக்ட்ரம் ஏலம் ஏழாவது நாளை எட்டியுள்ளது. Adani 5G: ஜியோ, ஏர்டெல்லை … Read more

வளர்ப்பு பிராணிகளை ‘குளு குளு’ என வைத்திருக்க பிரத்யேக ஆடைகள்..

ஜப்பானில், வெப்ப அலையில் இருந்து வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க, மின்விசிறியுடன் கூடிய பிரத்யேக ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பானில் வழக்கத்தை விட விரைவாக மழைகாலம் நிறைவுற்றதால், இதுவரை இல்லாத வகையில் வெகு நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது. 35 டிகிரி வெயிலை தாங்க முடியாமல் வளர்ப்பு பிராணிகள் சோர்வடைவதால், வெப்பத்தை தணிக்கும் வகையில் 80 கிராம் எடையிலான பேட்டரி மின்விசிறி இணைத்து தைக்கப்பட்ட ஆடைகள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 6,000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஆடை வளர்ப்பு … Read more

கனடாவிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் தீ… தீயணைப்புத் துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவின் வான்கூவர் நகரில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் நேற்று தீப்பற்றிய நிலையில், அந்த தீ குடியிருப்பு பகுதி ஒன்றிற்கும் பரவிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். வான்கூவரிலுள்ள Mount Pleasant பகுதியில் அமைந்துள்ளது நிர்வாணா என்னும் இந்திய உணவகம். அந்த உணவகத்தின் சமையலறையில் நேற்று மதியம் தீப்பற்றியுள்ளது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தாலும், அதற்குள் அந்த தீ அந்த உணவகத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி ஒன்றிற்கும் பரவிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், உடனடியாக … Read more

48வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மதுரையில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும்! பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 3 அல்லது 4 வது வாரத்தில் நடைபெறும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் 1,295 சதுர அடி பரப்பளவில், 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் 100 பெண் பயிற்சியாளர்கள் தங்கக்கூடிய 25 அறைகளுடன் கட்டப்பட்ட அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை காணொளி காட்சி வாயிலாக திறந்து … Read more

காமன்வெல்த்: பந்து உருட்டுதல் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

காமன்வெல்த்: பந்து உருட்டுதல் போட்டியில் இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது. அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 16-13 என்ற புள்ளிகணக்கில் வீழ்ச்சி இறுதிச் சுற்றுக்குள் இந்திய மகளிர் அணி நுழைந்துள்ளது.

இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் ஒன்றிய அரசு: மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு!

டெல்லி: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி; விலைவாசி உயர்வு காரணமாக ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது; … Read more

கடைசி நாளில் 70 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் – இனி தாக்கல் செய்தால் அபராதம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று கடைசி தினம் என்பதால் ஒரே ஒரே நாளில் 70 லட்சம் பேர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து உள்ளனர். நடப்பு நிதியாண்டிற்கான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் … Read more

பான் இந்தியா படங்களால் முடங்கிய தெலுங்கு சினிமா – என்னவாகும் தமிழ் படங்களின் படப்பிடிப்பு?

இன்று முதல் தெலுங்கு சினிமாத் துறை ஸ்டிரைக். பான் இந்தியா படங்களைக் குறை சொல்கிறது தியேட்டர் தரப்பு. என்ன பிரச்னை? இதனால் தமிழ் சினிமாவும் பாதிக்கப்படுமா? என்பதை பற்றி சிறுத் தொகுப்பாக இங்குப் பார்க்கலாம். பான் இந்தியா படங்கள் என்று அழைக்கப்படும், ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘புஷ்பா’ போன்ற படங்களை இந்திய ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அதேவேளையில், இதுபோன்ற மிகப் பெரிய பட்ஜெட் படங்களால் தெலுங்கு திரையுலகம், குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் நல்லப் படங்களை தயாரிக்கும் … Read more

பாலசோன் ஆற்றின் மறுகரையில் சிக்கிய 11 பேர் மீட்பு| Dinamalar

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் சுற்றுலா சென்ற போது பாலசோன் ஆற்றின் மறுகரையில் சிக்கிய 11 கல்லூரி மாணவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங்கின் துதியா பகுதியின் அருகே பாலசோன் ஆறு உள்ளது. இது இமயமலையின் அடிவாரத்தை ஒட்டியுள்ளது. இங்கு 11 கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். அப்போது பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் மாணவர்கள் ஆற்றின் கரையை திரும்ப முடியாமல் தவித்தனர். தகவலின் பேரில் விரைந்த தீயணைப்புத்துறையினர், … Read more

நானி – நஸ்ரியா பாடலுக்கு மோகன்லால் நடனம்

மலையாள திரை உலகின் நடிகர் சங்கமான 'அம்மா'வின் தலைவராக நடிகர் மோகன்லால் பொறுப்பு வகித்து வருகிறார். விரைவில் நடிகர் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக மோகன்லால் இந்த விழாவில் ஒரு பாடலுக்கு நடனமாடி தனது பங்களிப்பை தர இருக்கிறார். இதற்காக தற்போது ரிகர்சலிலும் ஈடுபட்டுள்ளார். இவர் நடனம் ஆடப்போவது சமீபத்தில் தெலுங்கில் நானி, நஸ்ரியா நடிப்பில் வெளியான அன்டே சுந்தரானிக்கி என்கிற … Read more