கோத்தபய நாடு திரும்ப இது நேரம் அல்ல : ரணில் விக்கிரமசிங்கே| Dinamalar

கொழும்பு: நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார தெருக்கடி காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின் அவர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அவரது விசா ஜூலை 28ம் தேதி முடிந்தது. அந்நாட்டு அரசு மேலும் 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கியது. … Read more

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்.. கடும் கோபத்தில் செய்த வேலையை பாருங்க.. நொந்துபோன முதலாளி!

அலுவலகத்தில் பொதுவாக நமக்கு பிடிக்காத விஷயங்கள் நடந்தாலே அந்த கோபத்தினை யார் மீது காட்டுவது என்று தெரியாமல், கடைசியில் பலரும் குடும்ப உறுப்பினர்கள் காட்டுவர். இன்னும் சிலர் கையில் கிடைத்ததை தூக்கி போட்டு உடைப்பர். இப்படி ஒவ்வொருவரும் அந்த மாதிரியான சமயத்தில் செய்வதறியாது பல மோசமான செயல்களில் ஈடுபடுவதுண்டு. அப்படி கனடாவில் ஒருவர் செய்த சம்பவம் இன்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது குறித்தாக வீடியோவும் வைரலாக பரவி வருகின்றது. கனடாவில் பணிபுரிந்து வந்த ஊழியர் … Read more

தென்மேற்கு பருவகால நிலை:எதிர்வரும் 06ஆம் திகதிவரை மழை

தென்மேற்கு பருவகால நிலை  காரணமாக இன்று (01) முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். அத்துடன், இந்த நாட்களில் 50 முதல் 60 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் … Read more

IND vs WI 2nd T20: தொடக்க ஜோடியில் மாற்றம்? இந்தியாவின் ஆடும் லெவன் இதுதான்!

India vs West Indies Live score Updates Tamil News: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 … Read more

இருசக்கர வாகனம் இது ஜேசிபி மோதி விபத்து.! கூலி தொழிலாளி உயிரிழப்பு.!

இருசக்கர வாகனத்தின் மீது ஜேசிபி மோதி விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர்களது மகன் கூலி தொழிலாளி ஹரிகிருஷ்ணன்(30) மற்றும் கவுதம் (29). இவர்கள் இருவரும் வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஜேசிபி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஹரிகிருஷ்ணன் மற்றும் கௌதம் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு … Read more

`உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை': பெண்ணின் தற்கொலை, காரணமான வங்கி ஏஜென்டுகள்!

ஆந்திராவை சேர்ந்த ஜே. ஹர்ஷிதா வர்ஷினி என்ற 17 வயது பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வியாழன் அன்று தற்கொலை செய்து கொண்டார். அந்தக் கடிதத்தில் “உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; யாராவது கேட்டால் பொறியியல் வேளாண்மை மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் ரேங்க் பெறவில்லை என சொல்லிவிடுங்கள்” என குறிப்பிட்டு இருந்தார். Crime மேல் படிப்புக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்? – தற்கொலை செய்துகொண்ட மாணவி! – விழுப்புரத்தில் சோகம் ஆனால் வங்கியில் … Read more

நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்: ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பில் திமுக கருத்து

சென்னை:” வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறைக்குப் பின்னர், ஒரு முழுமையான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிப்பட்ட … Read more

டிஹெச்எஃப்எல் பண மோசடி வழக்கு: தொழிலதிபர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டரை கைப்பற்றிய சிபிஐ

புனே: திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறு வனம் (டிஹெச்எஃப்எல்) மீதான பண மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டரை சிபிஐ கைப்பற்றியுள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட 17 வங்கிகளிடமிருந்து ரூ.34,615 கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான டிஹெச்எஃப்எல் மீதும் அதன் இயக்குநர்கள் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. … Read more

ஆக. 3ல் அமைச்சரவை விரிவாக்கம் – முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மேற்கு வங்க மாநில அமைச்சரவை வரும் 3 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், கடந்த மாத இறுதியில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதை அடுத்து, அவரது கட்சிப் பதவியை … Read more

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை! ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் புதிய நடைமுறை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் குழந்தை பிறப்பின் போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது. குறித்த இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் … Read more