தெலுங்குப் பட உலகில் இன்று முதல் ஸ்டிரைக்… காரணம் என்ன? ஷங்கர் படத்துக்கு சிக்கலா?

தெலுங்குப் பட உலகில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த திடீர் ஸ்டிரைக், அங்கே தியேட்டர்கள் மூடப்பட்டதா, படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்தோம். டோலிவுட் ஹீரோக்களின் சம்பளம் பெரிய அளவில் உள்ளது, படத்தின் பட்ஜெட் மிக அதிகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஹீரோக்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், சம்பளத்தை மொத்தமாக முதலிலேயே வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது. ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தின் முதல் பாதியைப் படம் ஆரம்பிக்கும் முன்னரும், மீதிப் பாதியை மொத்தப் படப்பிடிப்பும் … Read more

மூளையை பகிர்ந்து கொண்டு பிறந்த இரட்டையர்கள்: பிரித்தானிய மருத்துவ குழுவின் உதவியால் புதிய சாதனை!

மூளைகளை பகிர்ந்து கொண்டு தலைகள் இணைந்து பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலின்  அட்ரிலி மற்றும் அன்டோனியா லிமாக்கு பிறந்த பெர்னார்டோ மற்றும் ஆர்தர் லிமா என்ற இரட்டையர்கள், தங்கள் மூளைகளை இணைத்து பகிர்ந்து கொண்டு இருந்த நிலையில் 33 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளனர். மூன்று வயதே கொண்ட ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு மொத்தம் ஏழு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன,  இவற்றில் கடைசி இரண்டு அறுவை சிகிச்சைகள் மட்டும் 33 … Read more

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது! பாராளுமன்றத்தில் அமைச்சர் தகவல்…

டெல்லி: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பரந்தூர் தேர்வாகி இருப்பதாக பாராளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார். சென்னையில் மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. விமான சேவை அதிகரிப்பு காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.  … Read more

மின்கம்பங்களுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் இரு மடங்கு மரங்கள் நட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மின்கம்பங்களுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் இரு மடங்கு மரங்கள் நட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் பொது முடிந்தவரை மரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வன்முறையை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை தேவையில்லை; துப்பாக்கி எடுத்தால் துப்பாக்கியால் தான் பதில்!: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கொச்சி: வன்முறையை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை தேவையில்லை; துப்பாக்கி எடுத்தால் துப்பாக்கியால் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. சரணடைய முன்வருபவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல், … Read more

இதுவல்லவா தைரியம்! தங்கச் சங்கிலியை பறிக்க வந்தவர்களுக்கு பாடம் கற்பித்த சகோதரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள், கைகளைக் கட்டி தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபா மற்றும் சுஜி. உடன் பிறந்த சகோதரிகளான இருவரும் ஞாயிற்றுகிழமை இரவு அழகிய மண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது குழந்தைகள் … Read more

நெருங்கும் சுதந்திர தினம்: தேசியக்கொடியை டிபி-யாக மாற்றும் பாஜக பிரமுகர்கள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் தங்களது சமூக வலைதள பக்கங்களுக்கான டிபியை மாற்றி வருகிறார்கள். வரும் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் தேசியக் கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர்கள் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களுக்கான டிபியை மாற்றி வருகிறார்கள். I … Read more

ஜிகர்தண்டா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு – உருவாகிறது இரண்டாம் பாகம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘பீட்சா’ படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லஷ்மி மேனன், கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அசால்ட் சேதுவாக நடிகர் பாபி சிம்ஹா மிரட்டலான நடிப்பை … Read more

பிரவீன் கொலையில் பி.எப்.ஐ.,மத்திய அமைச்சர் ஷோபா திடுக்| Dinamalar

பெங்களூரு : ”பா.ஜ., பிரமுகர் பிரவீன் கொலையில், பி.எப்.ஐ., அமைப்பின் கைவரிசை உள்ளது. கேரளா போன்று கொலை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை பொறுப்பை ஏற்றுள்ள, என்.ஐ.ஏ., அறிக்கை அளித்த பின், இந்த அமைப்பை தடை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்,” என மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா தெரிவித்தார்.தட்சிண கன்னடா, சுள்ளியாவில், கொலை செய்யப்பட்ட பா.ஜ., பிரமுகர் பிரவீன் வீட்டுக்கு, மத்திய அமைச்சர் ஷோபா நேற்று சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் … Read more

தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்

ஹேய் சினாமிகா படத்திற்கு பிறகு பிருந்தா மாஸ்டர் இயக்கும் படம் தக்ஸ். இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் மும்பைகர், க்ரஸ் கோர்ஸ் படங்களில் நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். … Read more