வேகமாக சுழன்று குழப்பத்தை ஏற்படுத்திய பூமி: 24-மணி நேரத்திற்குள் சுழற்சியை முடித்து மீண்டும் சாதனை…

வாஷிங்டன்: பூமி 24-மணி நேரத்திற்குள் சுழற்சியை முடித்து, குறுகிய நாளில் மீண்டும் சாதனை படைத்ததுதுள்ளது. இது விஞ்ஞானிகள் மத்தி யில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  பூமி தொடர்ந்து இதே வேகத்தில் சுழன்றால் அது எதிர்மறை லீப் விநாடிகளின் அறிமுகத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்து உள்ளனர். கடந்த ஜூலை 29ஆம் தேதி, பூமி 24 மணி நேரத்திற்கு முன்பே தனது சுழற்சியை  முடித்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நாம் வாழ்ந்து வரும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. … Read more

அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி

பழனி: அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வயதுடைய பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சலுடன் கொரோனா  பாதிப்பும் உறுதியாகியுள்ளது. 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தோற்று உறுதி செயபட்டுள்ளது. 

மக்களவையில் 4 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: ஓம் பிர்லா எச்சரிக்கை

டெல்லி: மக்களவை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அளித்த உறுதிமொழியை ஏற்று இடைநீக்கம் ரத்து செய்துள்ளனர். மக்களவையில் பதாகைகளை ஏந்தி வரக்கூடாது என சபாநாயக்கர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அச்சுறுத்தும் குரங்கு அம்மை: வழிகாட்டுதல் குழுவை அமைத்தது மத்திய அரசு

குரங்கு அம்மை நோய் தொடர்பாக வழிகாட்டுதல் குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்தியாவில் குரங்கு அம்மை பரவலை தொடர்ந்து நோய் கண்டறிதல், வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதற்காக அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா மற்றும் பயோடெக் செயலர் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். உலகின் பல்வேறு … Read more

‘வேலையில்லா பட்டதாரி’ பட விவகாரம் – ஐஸ்வர்யாவை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கும் விலக்கு

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அப் படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் … Read more

ஆப்பரேஷன் பிரசவங்கள் அதிகரிப்பு சிக்கமகளூரு கலெக்டர் கவலை| Dinamalar

சிக்கமகளூரு : ”அரசு மருத்துவமனைகளில், ஆப்பரேஷன் பிரசவங்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது,” என சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் தெரிவித்தார்.சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த மூன்று மாதங்களில், சிக்கமகளூரில் 3,442 பிரசவங்கள் நடந்துள்ளன. இவற்றில், 53 சதவீதம் ஆப்பரேஷன் பிரசவமாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரை, இந்த மாவட்டத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் இறந்தன. கடூரில் ஆறு பச்சிளம் குழந்தைகள் இறந்தன. இது கவலையளிக்கிறது.அரசு மருத்துவமனைகளில் … Read more

பாரோஸ் படப்பிடிப்பை முடித்த மோகன்லால்

மலையாள சினிமாவில் நடிகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறியதுடன் அதை வெற்றி படமாகவும் ஆக்கினார். இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 40 வருடமாக நடிப்புலகிலேயே பயணித்து வந்த மோகன்லாலும் பாரோஸ் என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார். வழக்கமான கமர்சியல் ஆக்சன் பாதையில் செல்லாமல் குழந்தைகளை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார் மோகன்லால். போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் … Read more

பின்லேடன் சகோதரர்களிடம்ரூ.10 கோடி பெற்றாரா சார்லஸ்| Dinamalar

லண்டன்: அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர்மறைந்த ஒசாமா பின்லேடன் சகோதரர்களிடம்பிரிட்டன் இளவரசர் சார்லஸ் 10 கோடி ரூபாய் பெற்றதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 2001ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமானவர் அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். இவரை 2011ல் அமெரிக்க அதிரடிப் படை பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றது.இந்நிலையில் பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் பக்ர் பின் லேடன் ஷாபிக் ஆகியோரிடம் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் 10 கோடி ரூபாய் பெற்றதாக … Read more

மோடி அரசின் புதிய ONDC நெட்வொர்க்-ல் இணைந்த ரிலையன்ஸ் நிறுவனங்கள்.. இனி வேற லெவல்..!

இந்திய ரீடைல் சந்தை விரைவில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டும் நிலையில் ஆன்லைன் ரீடைல் வர்த்தகப் பிரிவில் சுமார் 80 சதவீத வர்த்தகத்தை நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் கையில் மட்டுமே உள்ளது. இந்தியாவின் ரீடைல் விற்பனை சந்தையை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டமிட்டு வரும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவும், மோனோபோலி பணிகளை வேரோடு பிடுங்கி எடுக்க மத்திய வர்த்தக அமைச்சகம் கொண்டு வந்த திட்டம் தான் ஓபன் நெட்வொர்க் … Read more

வீட்டை எரித்து விட்டு வீட்டிற்கு போகச் சொல்வதா? – போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க கேள்வி

இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ’Ranil go home’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே  “வீடு இல்லாத மனிதனை வீட்டிற்குச் செல்லச் சொல்வதில் அர்த்தமில்லை” எனக் கூறியுள்ளார்.  தம்மை வீட்டுக்குச் செல்லக் கோருவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும், மாறாக எரிந்த தனது வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப போராட்டக்காரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டை சீரமைக்க … Read more