லண்டன் பயணிகள் குஷி: சென்னையில் இருந்து தினமும் நேரடி விமானம்

Chennai Tamil News: சென்னை மிக முக்கியமான பன்னாட்டு விமான நிலையமாக திகழ்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதால் இந்த விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்தில் கல்வி, தொழில் நிமித்தமாக தமிழர்கள் அதிகம் உள்ளனர். எனவே சென்னையில் இருந்து லண்டன் செல்லும் நேரடி விமானத்திற்கு எப்போதும் டிமாண்ட் அதிகம்.  தினசரி சென்னையில் இருந்து லண்டனுக்கு இயக்கப்பட்ட விமானங்கள், பெருந்தொற்று காலத்தில் வாரத்திற்கு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டன. இதனால், டிக்கெட்டுகள் பலநாட்களுக்கு … Read more

BREAKING : சென்னை பரந்தூரில் அமைகிறது 2 வது விமான நிலையம்… மத்திய அரசு அறிவிப்பு.!

சென்னைக்கு அருகே பரந்தூரில் 2 வது புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு விமான நிலையம் அமைக்க உகந்த … Read more

இலங்கைக்கு வரும் சீன உளவுக் கப்பல்… தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவுக்கு பாதிப்பா? – முழுப் பின்னணி!

கடந்த சில தினங்களாக, அண்டை நாடான இலங்கைக்குச் சீனாவின் உளவுத்துறை கப்பல் ஒன்று வருவதாகச் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், தற்போது அந்தக் கப்பல் வருவதை இலங்கை ராணுவம் உறுதி செய்திருக்கிறது. எதற்காக அந்த உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகிறது… இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? இலங்கையில் முகாமிடும் சீனக் கப்பல்! ஜூலை 13-ம் தேதி அன்று சீனாவிலிருந்து கிளம்பிய `யுவான் வாங் – 5′ என்ற உளவுக் கப்பல் தைவான் நாட்டைக் கடந்து இந்தியப் … Read more

மாட்டிறைச்சி அரசியல் செய்ய இது திராவிட மாடல் அரசா அல்லது ஆரிய மாடல் அரசா? – திமுகவுக்கு சீமான் கேள்வி

சென்னை: “மாட்டிறைச்சி உணவின் பெயரால் பாஜக அரசும், அதன் ஆட்சியாளர்களும், செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடல் அரசா? இல்லை ஆரிய மாடல் அரசா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த முன்வர வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம், தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக … Read more

கேரளாவில் குரங்கு அம்மைக்கு ஒருவர் உயிரிழப்பு: ஆந்திரா, கர்நாடகாவில் தலா ஒருவருக்கு சிகிச்சை

திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மையானது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980-களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் உடன் இணைந்த பண்புகளைக் கொண்ட தாகும். இந்நிலையில், குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப் பட்டிருந்தது. கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் உறுதி … Read more

பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழை: பலி எண்ணிக்கை 320 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சாலைகளில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்கள் இருளில் தவித்து … Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல்

எரிபொருள் விநியோகத்தின் போது இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் உரிமத்தின் கியூ.ஆர் இலக்கத்திற்கு புறம்பான வகையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகள் குறித்து இவ்வாறு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் முறைகேடுகள் பற்றிய புகைப்படங்கள் காணொளிகள் என்பவற்றை 0742123123 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கியூ.ஆர் அட்டைகளுக்கு புறம்பாக எரிபொருள் விநியோகம் செய்தல், … Read more

Xiaomi: சியோமி ஸ்மார்ட் கண்ணாடி; இனி ஸ்மார்ட்போன் வேலைகளை இது பார்த்துக்கொள்ளும்!

Latest Xiaomi Smart Glasses: நுகர்வோர் டெக் சாதன தயாரிப்பு நிறுவனமான சியோமி, ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இருப்பினும், நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தவிர்த்து பல ஸ்மார்ட் டெக் கேட்ஜெட்டுகளையும் அறிமுகம் செய்துவருகிறது. அந்தவகையில் புதிய ஸ்மார்ட் கண்ணாடியை நிறுவனம் சந்தைக்கு அறிமுகம் செய்கிறது. சியோமி வெளியிட்டுள்ள விளம்பர போஸ்டரில் இதுவரை கண்டிராத ஒரு புதிய தயாரிப்பை ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் … Read more

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 1,48,995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது – மத்திய நிதியமைச்சகம்

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கிடைத்த மாத வருவாயில் இது இரண்டாவது அதிகத் தொகையாகும். மகாராஷ்டிர மாநிலம் 22 ஆயிரத்து 129 கோடி ரூபாயுடன் வரி வருவாயில் முதலிடத்தில் உள்ளது. 9795 கோடி ரூபாய்  வருவாயுள்ள கர்நாடகம் இரண்டாமிடத்திலும், 9183 கோடி ரூபாய் வருவாயுள்ள குஜராத் மூன்றாமிடத்திலும், 8449 கோடி ரூபாய் வரி வருவாயுள்ள தமிழகம் … Read more

5 பெண்களை தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட கல்யாணராமன்! அம்பலமான மோசடி

இந்தியாவில் ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாணராமனின் மோசடியை நான்காவது மனைவி அம்பலப்படுத்தியுள்ளார். புதுச்சேரியில் ஐந்து பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக, நான்காவது மனைவி பொலிசில் புகார் செய்ய வந்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் உள்ள பதிவில், நான், கடலுார் மாவட்டம் மேலக்குப்பத்தை சேர்ந்த காயத்ரி. எனக்கும், அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு (எ) தெய்வநாயகம் (42) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2020, ஜூலை மாதம் … Read more