கஞ்சா சாக்லேட் விற்பனை: கோவையில் 58வயது முதியவர் கைது…

கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக 58 வயது முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். போதை சாக்லேட் விற்பனை கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க கஞ்சா 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்து, குற்றவாளிகளை வேட்டையாடி வருகிறார். இருந்தாலும் கஞ்சா விற்பனையும், பதுக்கலும் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரின் வேட்டையில் மூட்டை மூட்டையாக கஞ்சா போன்ற போதை … Read more

கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம்: உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இரு நாட்கள் அவகாசம் விதித்து உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் திருத்தங்களை மேற்கொள்ள கல்லூரி முதல்வர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு…

டெல்லி: 11 வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று விவாதம் நடைபெறும் நிலையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஆகிய இரு அவைகளும் தினம்தோறும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறன. இந்த சூழ்நிலையில் இன்று 11வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி இருக்கிறது.  சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் அதன்பின் அவை இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. அந்த சமயத்தில் எதிர் … Read more

ஜூலையில் ரூ.1,48,995 கோடி ஜி.எஸ்.டி. வசூல் – கடந்த ஆண்டை விட 28% கூடுதல்

கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது. 2022 ஜூலை மாதத்தில்  மொத்தம் ரூ.1,48,995 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ் ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி உள்பட). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 … Read more

எல்லையில் வாலாட்டும் சீனா| Dinamalar

புதுடில்லி: இந்திய எல்லையில் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க திபெத்தியர்களை வலுக்கட்டாயமாக குடியேற்ற சீனா திட்டமிட்டு வருகிறது. இமயமலை பகுதியில் 624 குடியிருப்புகளை கட்ட சீனா திட்டமிட்டுள்ள நிலையில் 2030 ஆண்டுக்குள் திபெத் தன்னாட்சி பகுதியிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான திபெத்தியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 4800 மீட்டர் உயரத்தில் வசிப்பவர்களை இடமாற்றம் செய்வதாக சீனா கூறினாலும் அதற்கு அறிவியல் ரீதியாத எவ்வித ஆதாரமும் இல்லை. எல்லைப்பகுதியில் ஆதிக்கத்தை செலுத்தத்தான் … Read more

இந்தியா தான் அடுத்த ஐரோப்பா.. கனவு திட்டத்தை தீட்டும் ரஷ்யா..!

உக்ரைன் மீதான போருக்கு பின்பு உலக நாடுகளில் இருந்து தனித்துவிடப்பட்ட நிலையில் இருக்கும் ரஷ்யாவுக்குத் தனது வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யச் சிறிய அளவிலான வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில், எதைச் செய்தாலும் வேகமாகவும், பெரியதாகச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ரஷ்யா-வின் தற்போது முக்கிய வர்த்தகக் கூட்டணி நாடுகளாக இருப்பது சீனா, இந்தியா, ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் இதர சிறு மற்றும் நடுத்தரச் சோவியத் நாடுகள் தான். … Read more

Russia Ukraine War: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

உக்ரைனின் மிகப்பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Nibulon என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஒலெக்ஸி வடதுர்ஸ்கி (Oleksiy Vadatursky) மற்றும் அவரது மனைவி இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மைகோலேவில் மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய தாக்குதலில் தம்பதியினர் பலியாயினர். 74 வயதான ஒலெக்ஸி வடதுர்ஸ்கி விவசாய நிறுவனமான நெபுலான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர்  இறந்து விட்டார் என்று மைகோலிவ் கவர்னர் விட்டலி கிம் கூறியதாக AFP செய்தி நிறுவனம் … Read more

ஜம்மு-காஷ்மீர்: மாதா கோயில் பாதயாத்திரை; குறுகியகாலத்தில் 170 அடி பாலம் அமைத்து உதவிய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீரின், கிஷ்த்வார் மாவட்டத்தில் `மச்சயில் மாதா இமயமலை கோயில்’ அமைந்திருக்கிறது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்தக் கோயிலில் கடந்த இரண்டாண்டுகளாக யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் தாக்கம் தணிந்திருப்பதால் பாத யாத்திரை தொடங்கியிருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்துச் செல்லப்பட்டது. தற்போது வருடாந்தர புனித யாத்திரை தொடங்கவேண்டியிருந்ததால், குறுகியகாலத்தில் பாலம் அமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. … Read more

கணியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கக்கூடாது” என மாணவியின் தாய் தரப்பில் மனு

கள்ளக்குறிச்சி கணியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்க கூடாது என உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐவரும் ஜாமின் கோரி கடந்த 28ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில், இன்று அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முன், மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பில் மனு … Read more

மருத்துவமனைக்கு வராமல் வருகைப் பதிவு: கோவை அரசு மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் சஸ்பெண்ட்

சென்னை: மருத்துவமனைக்கு வராமல் வருகைப் பதிவு செய்த கோவை அரசு மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் இதய நோய் சிறப்பு நிபுணர் முனுசாமி தினமும் மருத்துவமனைக்கு வருகை தராமலேயே, வருகை பதிவேட்டில் வந்ததாக பதிவு செய்யப்பட்டு வந்தது. இது குறித்து புகார் வந்ததையடுத்து, நேற்று குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். … Read more