பாகிஸ்தானில் மழை 320 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் பெய்த கன மழையால் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. நாடு முழுதும் பரவலாக கன மழை கொட்டுவதால் இது வரை 13 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 குழந்தைகள் 32 பெண்கள் உட்பட 320 பேர் உயிர்இழந்துள்ளனர்.பலுசிஸ்தான் சிந்து கராச்சி கைபர் பக்துன்க்வா … Read more

டிசிஎஸ்,விப்ரோ, ஹெச்சிஎல் கொடுத்த முக்கிய அப்டேட்.. அட்ரிஷன், சம்பளம், WFH.. இதோ முக்கிய விவரங்கள்!

ஐடி துறையில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து தேவையானது அதிகமாக இருந்து வரும் நிலையில், வளர்ச்சி விகிதமானது அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் வளர்ச்சி விகிதமானது கணிசமான வளர்ச்சியினை எட்டியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக தேவை அதிகரித்து, நல்ல வளர்ச்சி, பல ஒப்பந்தங்கள் என ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு கொண்டிருந்தாலும், ஐடி நிறுவனங்களுக்கு இந்த காலகட்டட்திலும் ஒரு பெரிய சவால் இன்று வரையில் இருந்து வருகின்றது. அது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் … Read more

’2024 தேர்தல் வியூகம், சாதி கட்சிகளுடனான கூட்டணி’:  3 நாள் பயிற்சி பட்டறையில் பாஜக தலைவர்களுக்கு அட்வைஸ்

2024 மக்களவை தேர்தலில் கவனம் செலுத்திங்கள் என்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பாஜக மாநில அளவிலான பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள சித்ரகூட் என்ற வழிபாட்டுதளத்தில், பாஜகவின் மாநில அளவில் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில், மோடி அரசின் சாதனைகளை மக்களுக்கு எப்படி எடுத்து செல்வது என்பது தொடர்பாக விவரிக்கப்பட்டது. மேலும் ஜாதி கட்சிகளுடனான கூட்டணியில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி மற்றும் … Read more

பலுசிஸ்தானில் கனமழை… 7 அணைகள் உடைந்தன; 10,000 வீடுகள் சேதம்; 124 பேர் பலி!

பாகிஸ்தான் மக்கள் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக சிரமப்பட்டுவரும் நிலையில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருப்பதாவது, “பலுசிஸ்தானில் பெய்த கன மழையால் ஏழு அணைகள் உடைந்துள்ளது. இதனால் பல்வேறு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 6 பேரின் ரத்த மாதிரிகளைப் புனே வைரஸ் ஆய்வகத்தில் சோதித்ததில் யாருக்கும் குரங்கம்மை நோய்ப் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம், ஆந்திரத்தின் 15 மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்களுக்கான பயிலரங்கத்தைச் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குரங்கம்மை நோய் அறிகுறியுள்ளோரின் ரத்த மாதிரிகளைச் சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வகத்திலேயே பரிசோதிக்கலாம் … Read more

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதாவின் பெயர் மறைக்கப்பட்டதா? – ஓபிஎஸ்

சென்னை: “தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக எங்கெல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர்கள் மறைக்கப்பட்டதோ, அவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், கட்டணமில்லா கல்வி வழங்கும் திட்டம், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பைகள், காலணிகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், … Read more

'துப்பாக்கிக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும்' – ஆளுநர் ஆர்.என்.ரவி

துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “துப்பாக்கியை பயன்படுத்துவர்களை துப்பாக்கி கொண்டுதான் கையாள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவையில்லை. தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை. கடந்த 8 ஆண்டுகளாக நம் நாட்டில் எந்தவித … Read more

மன்மோகன் மாதிரி இல்ல மோடி.. அடிச்சா அடிதான்: ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பேசுவது சமீபகாலங்களில் அதிக கவனம் பெற்றுவருகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். சனாதனம் குறித்த அவரது பேச்சு சர்ச்சையை சந்தித்து ஓய்ந்த நிலையில் தற்போது வன்முறைக்கு வன்முறையால் தான் தீர்வு காணமுடியும் என்று பொருள்படும் வகையில் பேசியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய … Read more

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.  இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  எரிபொருள் விலையில் திருத்தம் இதேவேளை ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு மாதமும் முதலாம் … Read more

புதிய மதுபானக் கொள்கையை கைவிடுவதாக ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு..!

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை கைவிடுவதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்ததை அடுத்து மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையை வெளியிடும் வரை பழைய கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என துணை முதலமைச்சரும், கலால் அமைச்சருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் சில்லறை மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்த இருப்பதால் 468 தனியார் மதுக் கடைகளின் உரிமம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. Source link