Month: August 2022
பிரான்சில் நண்பர்களை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய தம்பதியர்… அவர்கள் கண்ட அதிரவைக்கும் காட்சி
பிரான்சில் தங்கள் நண்பர்கள் சிலரை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய தம்பதியர் நீச்சல் குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் 80 வயதுகளிலிருக்கும் அந்த பிரித்தானிய தம்பதியர், விடுமுறையில் தாங்கள் தங்கும் தெற்கு பிரான்சிலுள்ள Hérault என்ற இடத்தில் அமைந்திருக்கும் தங்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள். இரவு தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும் என அவர்கள் அழைத்ததைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அவர்களுடைய வீட்டுக்குச் சென்றுள்ளார்கள். விருந்துக்கு வந்தவர்கள் தம்பதியரை அழைத்தும் யாரும் வெளியே வராததால், அவர்கள் … Read more
மதுரை திருமலை நாயக்கர் மஹாலில், சினிமா சூட்டிங் நடத்த நிரந்தர தடை! உயர்நீதிமன்றம் அதிரடி
மதுரை: மதுரையின் அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹாலில், சினிமா சூட்டிங் நடத்த நிரந்தர தடை விதித்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மதுரையின் சிறப்பை போற்றும் வரலாற்று அடையாளங்களில் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகாலும் ஒன்று. இந்த காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி வணண்ண விளக்குகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மஹால் சினிமா … Read more
புதுக்கோட்டை தேர்விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை தேர்விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று பிரகதாம்பாள் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் விபத்து குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார். தேர் விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழுக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழுக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர் அமளி காரணமாக 11-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். என்.எஸ்.சி.ஆட்கள் தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் புதிதாக 16,464 பேருக்கு கோவிட்: 39 பேர் பலி| Dinamalar
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,464 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,464 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,36,275 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 16,112 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். தற்போது 1,43,989 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக மேலும் 39 பேர் மரணமடைந்ததால், … Read more
மீண்டும் விக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. கோப்ரா படத்தை தொடர்ந்து மீண்டும் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை அஜய் ஞானமுத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. … Read more
3 நாளில் தங்கம் விலை ரூ.1000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. வாங்கலாமா, வேண்டாமா?
தங்கம் விலையானது முந்தைய சில அமர்வுகளாக ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது மேற்கோண்டு குறையுமா? மீண்டும் 1700 டாலர்களை உடைக்குமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? தற்போதைய விலை நிலவரம் என்ன? குறிப்பாக இந்திய சந்தையில் என்ன நிலவரம், வாருங்கள் பார்க்கலாம். 10 வயதில் ஒரு குட்டி கோடீஸ்வரர்… பல கோடிக்கு அதிபதியான ஆச்சரியம்! ரூ.1000 … Read more
இந்தியாவில் குரங்கம்மை நோய்: வாலிபர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான கேரளாவில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் இறந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் துபாயிலிருந்து கேரளா வந்த கொல்லத்தை சேர்ந்த 35 வயதான வாலிபருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மலப்புரம், கண்ணூரை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் இந்த நோய் பரவியது. இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி துபாயிலிருந்து வந்த … Read more
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 1) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை … Read more