ஆன்லைன் சூதாட்டம் : தமிழக அரசு தடுமாறுகிறது! பாமக தலைவர் அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு! 

ஆன்லைன் சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு ஆகிவிட்டது. தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன்  ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் … Read more

`அமைச்சரையும் விட்டுவைக்கவில்லையா?’ – லோன் ஆப்; ஒரு மணிநேரத்தில் 50 போன்கால்கள்; எரிச்சலான அமைச்சர்

சென்னை திருமங்கலத்தில் இயங்கிவரும் ஒரு கால் சென்டரின் பணியாற்றும் ஊழியர்கள் 4 பேர், ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியான தகவலில், அசோக் என்பவர் செல்போன் லோன் ஆப் மூலம் ரூ 8.5 லட்சம் கடன் வாங்கியதாகவும், அவர் கடனை சரியாகத் திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இவர் போன்ற வாடிக்கையாளர்களை கையாள அந்த நிறுவனம் வாடிக்கையாளரின் செல்போனை ஹேக் செய்து, அவர்களின் contact list -ல் உள்ள நபர்களை அழைத்து, அந்த நபர் … Read more

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு

சென்னை: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதி அறிவித்தார். இதன்படி, * கரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு அந்த குழந்தை 18 வயது … Read more

இந்திய ரூபாய் நோட்டில் சாவித்ரிபாய் படத்தை அச்சிடுக: ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: ரூபாய் நோட்டில் சாவித்ரிபாய் புலே படத்தை அச்சடிக்க திமுக எம்.பி டி.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசர் காலம் முதலான ஆணாதிக்கத்தை ஒழிக்க நாடாளுமன்ற விவாதத்திற்கு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். இது குறித்து இன்று விழுப்புரம் தொகுதி எம்.பி.,யான டி.ரவிக்குமார் அளித்த நோட்டீஸில் குறிப்பிட்டிருப்பதாவது: இந்தியாவில் காகித பணம் அச்சிட ஆரம்பித்து 200 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ஜார்ஜ் மன்னரின் உருவப்படத்துக்குப் பதிலாக சாரநாத் தூணின் சிங்கத் தலையை நாம் ரூபாய் … Read more

கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் ஜோ பைடனுக்கு மீண்டும் தொற்று

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கரோனாவிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் மீண்டும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னரே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்நிலையில் பைடனுக்கு மீண்டும் சனிக்கிழமை கரோனா … Read more

தெலங்கானாவில் பாஜக வளர்ச்சி: மம்தாவின் மேற்குவங்க மாதிரி கேசிஆருக்கு கைகொடுக்குமா?

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் காவிக்கொடியை பறக்கவிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. ஆனால், தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் அக்கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்றன. அந்த வரிசையில் தெலங்கானா மாநிலமும் இப்போது சேர்ந்துள்ள நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது … Read more

Jio Recharge: ஜியோ ரீசார்ஜுக்கு அமேசான் பே வழங்கும் ரூ.200 தள்ளுபடி!

Jio 666 plan details 2022: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ப்ரீபெய்ட் திட்டங்களின் பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களை நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜியோவின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்போது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.200 வரை சேமிக்க முடியும். மேலதிக செய்தி: உலகம் … Read more

ஐநா அமைதிப்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 2 பேர் பலி.. உயிரிழந்தவர்களுக்கு ஐநா பொதுச்செயலாளர் இரங்கல்

உகாண்டாவில், ஐநா அமைதிப்படையைச் சேர்ந்த வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதற்கு, ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். உகாண்டா மற்றும் காங்கோ நாட்டின் எல்லையில் உள்ள காசிந்தியில் மொனுஸ்கோ ராணுவத்தை சேர்ந்த சில வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். Source link

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்.பி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மீது, பண மோசடி வழக்கில் பெண் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பத்ரா சால் மறுசீரமைப்பு பண மோசடி வழக்கில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா பட்கரை, சஞ்சய் ராவத் மிரட்டுவதாக கூறப்படும் ஆடியோ வைரலான நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில், குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதித்தல் மற்றும் உள்நோக்கத்துடன் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் … Read more

"யாரும் மெட்டு தரவில்லை; கடைசியில் உண்மைதான் வெல்லும்…" – மனம் திறந்த பாடலாசிரியர் அறிவு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழா நிகழ்ச்சியில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது. இதைப் பாடகி தீ, கிடாக்குழி மாரியம்மாள் சேர்ந்து பாடியிருந்தனர். ஆனால் இதை எழுதிப் பாடியிருந்த அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரின் … Read more