பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு

சென்னை: பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, குடியரசுத்தலைவர் கொடியை முதல்வர் ஸ்டாலின் வாயிலாக காவல் துறைக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: நாட்டின் சிறந்த காவல் துறைகளில் தமிழக காவல் துறையும் ஒன்று. இந்திய ராணுவம் அல்லதுமாநில காவல் துறைக்கு … Read more

குஜராத்தில் பரவும் லம்பி ஸ்கின் வைரஸ்: 5000-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 5000க்கும் மேற்பட்ட இறந்துள்ளன. குறிப்பாக குஜராத்தின் கச் மாவட்டத்தில் பெருமளவில் மாடுகள் உயிரிழந்துள்ளனர். புஜ் பகுதியில் திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான இறந்த மாடுகளின் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளிலும் கால்நடைகள் இறந்து வருகின்றன. கச், புஜ், ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இறந்துபோன மாடுகளின் சடலங்கள் பொது இடங்களில் … Read more

வெளிநாட்டில் அழகிய இளம்பெண்ணிடம் புலம்பெயர்ந்தவர் கூறிய ஒரு வார்த்தை… அடுத்து நடந்த பயங்கரம்

அழகிய இளம்பெண் ஒருவரிடம், ஏதாவது வியாபாரம் ஆனால் நன்றாயிருக்கும் என்ற எண்ணத்தில், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார் ஒரு வியாபாரி. அப்புறம் ஏன் அப்படிச் சொன்னோம் என்று நினைத்து வருந்துவதற்குக் கூட அவர் உயிருடன் இல்லை… நைஜீரியாவிலிருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தவரான Alika Ogorchukwu(39) என்பவர், இத்தாலியில் தெருக்களில் வியாபாரம் செய்துகொண்டிருந்திருக்கிறார். அப்போது அழகான இளம்பெண் ஒருவர் அவ்வழியே வர, அவரிடம் ஏதாவது விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கில், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களுக்காக ஒரு … Read more

நர்சிங், பி.பார்ம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில், பி.பார்ம், நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளத் தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், அரசு கலை அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்து, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றுமுதல்மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். … Read more

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோ சூட் நடத்த நிரந்தரத் தடை விதிப்பு

மதுரை: மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ சூட் நடத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்பெற்ற திருமலை நாயக்கர் அரண்மனையை பாதுகாக்கும் வகையில் தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கும்பாவுருட்டி அருவியில் வெள்ளம் பெருக்கு : மதுரையைச் சேர்ந்த குமரன் என்பவர் வெள்ளத்தில் சிக்கி பலி….

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கும்பாவுருட்டி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி மதுரையைச் சேர்ந்த சுற்றுல்லா பயணி ஒருவர் மரணமடைந்துள்ளார். கொல்லம் அடுத்த அச்சன் கோயிலில் புகழ் பெற்ற கும்பாவுருட்டி அருவியில் கொட்டும் தண்ணீரை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்ததை தொடர்ந்து சுமார் 30 சுற்றுல்லா பயணிகள் குளித்து கொண்டிருந்தன. அப்போது அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கும்பாவுருட்டி அருவியில் ஏற்பட்ட … Read more

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இதற்கெல்லாம் இனி நடத்த நிரந்தர தடை!

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு, போட்டோ சூட் நடத்த நிரந்தர தடை விதித்து, தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. கி.பி.1636 ஆம் ஆண்டு திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் மதுரையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்த மகாலை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை எடுக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருப்பினும் எந்த வித அனுமதியின்றி … Read more

300 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், டெக் மஹிந்திரா சரிவு..!

ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், தடுமாற்றங்களைக் கடந்து மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தக உயர்வுடன் துவங்கியுள்ளது. முக்கியமாக ஆட்டோமொபைல், மெட்டல், சில முக்கியமான நிதியியல் துறை பங்குகள் உயர்வுடன் துவங்கியுள்ளது ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதேபோல் பல முக்கியமான நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளதால் சந்தையில் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக இன்று ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது. Aug 1, 2022 … Read more

பராமரிப்புப் பணி.. சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்வெட்டு

தாம்பரத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாம்பரம்: சிட்லபாக்கம் சிட்லபாக்கம் 1வது பிரதான சாலை, சுப்பிரமணியன் தெரு, ராமச்சந்திரா சாலை, பத்மநாபன் தெரு, ஐயா சாமி தெரு, ஜோதி … Read more

“ஜனாதிபதியை கண்ணியக்குறைவாக பேசிய ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வேண்டும்" – ஆதிர் ரஞ்சன்

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, கடந்த ஜூலை 27-ம் தேதி செய்தியாளரிடம் பேசும்போது, “இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பவர் அனைவருக்குமானவர். அவர் இந்தியாவின் `ராஷ்டிரபத்னி’ ஆவார்” என்றிருந்தார் ஆதிர் ரஞ்சன். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பலரும், “இந்தியாவின் குடியரசுத் தலைவரை வேண்டுமென்றே ஆதிர் ரஞ்சன் அவமானப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ராசன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குக் கடிதம் எழுதினார். அதில், “நான் … Read more