மாணவர், ஆசிரியர்கள் வருகைப்பதிவை இன்று முதல் செயலியில் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு
சென்னை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை இன்று முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 37,554 அரசுப் பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏறத்தாழ 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர் வருகைப்பதிவைக் கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை பள்ளிக்கல்வித் துறை 2019-ம் ஆண்டில் கல்வித் துறை அறிமுகம் செய்தது. இதன் வழியாக ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஆசிரியர் பணிப் பதிவேடு, வருகைப்பதிவு, … Read more