சிலிண்டர் விலை இன்று முதல் குறைப்பு…. ஆனால் இல்லத்தரசிகள் சோகம்!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் முதல் தேதி என்பதை அடுத்து எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது இந்த அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூபாய் 36.00 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளதால் … Read more

இ.பி.எஸ் பக்கமோ, ஓ.பி.எஸ் பக்கமோ நான் இல்லை: சசிகலா பேட்டி

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சென்னை அசோக்நகரில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நான் இ.பி.எஸ் பக்கமோ, ஓ.பி.எஸ் பக்கமோ இல்லை. நான் யார் பக்கமும் இல்லை” என்று கூறினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சென்னை அசோக் நகரில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினார். பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “மூத்த அண்ணன் அதனால் பார்த்துவிட்டு … Read more

#Breaking: கோயில் ஊழியர்கள் தேரை கவிழ்த்தனரா.? புதுக்கோட்டை தேர் கவிழ்ந்த விபத்தில் போலிஸ் வழக்குப் பதிவு.!

புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில், தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் தேருக்கு அருகில் நின்ற 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  உடனே … Read more

Doctor Vikatan: குழந்தைக்கு கட்டாயப்படுத்தி சாப்பாடு ஊட்டலாமா… பசியில் அழும்வரை காத்திருக்கலாமா?

குழந்தை பசியோடு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தாய்ப்பாலோடு திட உணவையும் கொடுக்கும்போது, சிலநேரம் திட உணவை சாப்பிட மறுக்கிறது. குழந்தை பசியோடு உள்ளதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. குழந்தை கேட்கட்டும் என உணவு கொடுக்காமல் காத்திருக்க வேண்டுமா அல்லது கட்டாயப்படுத்தி அதற்கு நேரத்துக்கு சாப்பாடு ஊட்ட வேண்டுமா? ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்… பச்சிளம் குழந்தைகளால் மிகக் குறைந்த அளவுதான் உணவு … Read more

பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலி பறிக்க முயற்சி.. தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காட்டாதுறையைச் சேர்ந்த சகோதரிகளான சுபா மற்றும் சுஜி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அழகிய மண்டபம் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவன் சுஜியின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளான். இதைக் கண்ட … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அக். 1, 2, 3-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 4-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும். இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், … Read more

பயங்கரவாத வேட்டையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த ராணுவ மோப்ப நாய்க்கு இறுதி அஞ்சலி..!

காஷ்மீரில் ராணுவத்தினருக்கும்-பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான ராணுவ மோப்ப நாய்க்கு வீரர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பாராமுல்லா மாவட்டத்தில் வானிகாம் பகுதியில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, பஜாஜ் மற்றும் ஆக்சல் என்ற 2 ராணுவ நாய்கள் பாடி கேமராக்கள் அணிந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டிற்குள் அனுப்பப்பட்டன. பாதுகாப்புப் படையினருக்கும்-பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், மறைந்திருந்த பயங்கரவாதிகள் ஆக்சல் என்ற மோப்ப நாயை நோக்கி சுட்டதில் படுகாயமடைந்து … Read more

புதுக்கோட்டைதேர் விபத்து: அமைச்சர் சேகர் பாபு இன்று நேரில் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டைதேர் விபத்து நடத்த இடத்தில் அமைச்சர் சேகர் பாபு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இன்றைய தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக கோயில் ஊழியர்கள் ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் … Read more

ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவதையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக  ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். 

அழுக்கு மெத்தையில் துணைவேந்தரை படுக்க வைத்ததால் சர்ச்சை : பஞ்சாப் சுகாதார அமைச்சரை நீக்க இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்!!

சண்டிகர்: நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அறைகளில் இருந்த அழுக்கு மெத்தையில் துணை வேந்தரை படுக்க வைத்த விவகாரத்தில் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சரை நீக்க இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு பரித்கோட்டில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் ஜூரமஜ்ரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்காக படுக்கைகள் மிகவும் அழுக்காக இருந்ததை கண்டு கோபமடைந்த அவர், … Read more