“விளையாட்டு வீரர்களுக்கு, அரசுப்பணியில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்”-ஜாங்கிட்

“அரசு பணி நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் ஜாங்கிட் திருச்சியில் பேட்டி திருச்சி மாநகர காவல்துறையின் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 … Read more

எத்தியோப்பியா பயணிக்கு சின்னம்மை; சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தகவல்| Dinamalar

பெங்களூரு : ”சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எத்தியோப்பியாவில் இருந்து வந்திருந்தவருக்கு ‘குரங்கு அம்மை’ பாதிப்பில்லை. ‘சின்னம்மை’ என்பது அறிக்கையில் வந்துள்ளது,” என சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.கேரளாவில், ‘குரங்கு அம்மை’ பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட உடன், நாடு முழுதும் உஷார்படுத்தப்பட்டது. ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தவருக்கு, ‘குரங்கு அம்மை’க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.அவரின் ரத்த மாதிரி, தோல்புண் மாதிரிகள், பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் மஹாராஷ்டிரா … Read more

குடும்பமே ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள்… எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரி ஆவது என்பதே இந்தியாவில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. அதுவும் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆவது என்பது கனவாகவே போய்விடுகிறது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் உள்ள நான்கு பேர்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆகி உள்ளனர் என்பது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து தற்போது பார்ப்போம். நடுத்தர மக்களின் கனவு உடைந்தது.. இனி சமாளிக்க … Read more

மேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் புதிய பஸ் சேவை

பாடசாலை மாணவர்களுக்கான புதிய பஸ் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. இதன்படி, முதற்கட்டமாக மேல் மாகாணத்தை கேந்திரமாகக்கொண்டு இந்த பஸ் சேவை இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார். கம்பஹா, ஹொரணை, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக இந்த பஸ் சேவை முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக இன்றில் இருந்து மேலும் 40 பஸ் கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்சமயம் சிசுசெரிய … Read more

பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர இன்று முதல்  விண்ணப்பிக்கலாம்.!

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.ஃபார்ம், பி.எஸ்.சி. நர்சிங், டிப்ளமோ இன் சைக்கியாட்ரி உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் , 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் , பி . பார்ம் . ( லேட்டரல் என்டிரி ) படிப்பு , போஸ்ட் … Read more

Tamil News Live Update: டிஎன்பில்- கோவை- சேப்பாக் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிப்பு

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates சிலிண்டர் விலை குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 36.50 காசுகள் குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை. அதே … Read more

கடலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக 50 அடி கிணற்றில் விழுந்த பெண்..!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த 55 வயதான சரஸ்வதி, வீட்டின் பின்புறமுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். கிணற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்ததால் தத்தளித்து கொண்டிருந்த மனைவியை பார்த்து அவரது கணவர் மகாலிங்கம் கொடுத்த தகவலின்பேரில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி சரஸ்வதியை பத்திரமாக மீட்டு … Read more

காவல் துறையில் அனைவருக்கும் பதக்கம்: குடியரசுத் தலைவர் கொடி பெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழக அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று நலத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி பெறும் விழா, சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று, குடியரசுத் தலைவர் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாயிலாக … Read more

கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான தருணம் அல்ல.. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி!

நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களைத் தூண்டி விடும் என்றார். மேலும் அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். இதற்கிடையில் நிர்வாக ஒப்படைப்பு சிக்கல்கள் மற்றும் பிற அரசாங்க அலுவல்களை கையாள்வதற்காக ரணில் விக்ரமசிங்கே முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் தொடர்பில் இருப்பதாக … Read more

காஷ்மீரில் குறுகிய காலத்தில் 170 அடி பாலம் அமைத்து பக்தர்களுக்கு உதவிய ராணுவம்!

காஷ்மீரில் குறுகிய காலத்தில் 170 அடி பாலம் அமைத்து பக்தர்களுக்கு ராணுவம் உதவியுள்ளது. கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சயில் மாதா இமயமலை கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புனித யாத்திரை இன்று தொடங்குகிறது. இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் அண்மையில் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ராஷ்ட்ரீய ரைபிள் படை என்ஜினீயர் குழுவுடன் இணைந்து ராணுவம் மேற்கொண்ட பணிகளால் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. Source link