மிக இளம் வயது பாலஸ்தீன போட்டியாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டின் மிக இளம் வயது போட்டியாளரான பாலஸ்தீனை சேர்ந்த ராண்டா சேடருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மகாபலிபுரத்தில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் இன்று மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெற்ற வருகிறது. மூன்றாவது நாளாக இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். போட்டி நடைபெறும் இடத்தில் சென்று போட்டி … Read more

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை  : புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த  விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை  மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில்  தேரை வழிநடத்திய திருகோகர்ணம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

வெளிநாட்டு நன்கொடையை விடுவிக்க தொண்டு நிறுவனங்களிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்: போனை ஒட்டு கேட்டு பிடித்தது சிபிஐ

புதுடெல்லி: வெளிநாட்டு நிதி தொடர்பான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் 10 சதவீத கமிஷன் கேட்டதை செல்போன்களை ஒட்டு கேட்டு சிபிஐ பிடித்துள்ளது. தன்னார்வ தொண்டு அமைப்புகள் (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுகின்றன. இந்த பணம் தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இந்த நன்கொடையை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதில், தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் இந்த நிதியை பெறுவதற்கு … Read more

ஆதிசக்தி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா| Dinamalar

தங்கவயல : ராபர்ட்சன் பேட்டை நான்காவது பிளாக் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிசக்தி மாரியம்மன் கோவில் 59ம் ஆண்டு ஆடித்திருவிழா வரும் 4 முதல் 6ம் தேதி வரை நடக்கிறது.ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு வரும் 4ம் தேதி காலை சிறப்பு பூஜை, தீபாராதனை, பிற்பகல் 3:15 மணிக்கு ஊர் எல்லை பூஜை, அம்மன் வீதி உலா, இரவு 7:30 மணிக்கு ஓம் சக்தி மன்றத்தினரின் அக்னி சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு காப்பு … Read more

காலாவதியான பாஸ்போர்ட்டை அலுவலகம் செல்லாமல் புதுப்பிப்பது எப்படி?

நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினால் பாஸ்போர்ட் வைத்திருப்பது அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. வெளிநாட்டுப் பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு உங்கள் அடையாள சான்று ஆவணமாகவும் பாஸ்போர்ட் செயல்படும். எனவே ஓவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட்டை பெற்று கொள்வதும், அது காலாவதி ஆனதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமான ஒன்றாகும். உலகிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா..?! காலாவதி பாஸ்போர்ட் என்பதும் மற்ற ஆவணங்களைப் போலவே ஒரு குறிப்பிட்ட செல்லுபடியாகும் காலம் இருக்கும். எனவே பாஸ்போர்ட் … Read more

குறைவான எண்ணெய்யில் சுவையான 3 பக்கோடா ரெசிபி

நம்மில் பலருக்கு பிடித்த உணவாக இருப்பது பக்கோடாதான் ஆனால் இதில் அதிக எண்ணெய் இருப்பதால், அதை சாப்பிட மறுக்கிறோம். குறைந்த எண்ணெய்யில் எப்படி பக்கோடா செய்வது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வழிமுறையை பயன்படுத்தி  3 வகையான பக்கோடா செய்து பாருங்கள். சில டிப்ஸ் அதிக தீயில் எண்ணெய்யை வைக்க கூடாது. அப்படி தீயை கூட்டினால் பக்கோடா கரிந்து போய்விடும். அதிக எண்ணெய் செலவாகும். இதுபோல பக்கோடாவை வறுத்ததும், எண்ணெய் உருஞ்சும் தாளில் அதை வைக்க … Read more

கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022- 23ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 4.07 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று அரசு கல்லூரி இயக்ககம் … Read more

இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள்.. உணவளித்து, உதவிய இலங்கை கடற்படை..!

தலைமன்னார் அருகே படகு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால்  நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை மீட்ட இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு உணவளித்து கரை திரும்பி வர உதவி செய்தனர். படகு என்ஜின் கோளாறை சரிசெய்ய முடியாததால், படகின் உரிமையாளருக்கு தகவல் அளித்த இலங்கை கடற்படையினர், சர்வதேச எல்லையில்  படகையும், மீனவர்களையும் பத்திரமாக மற்றொரு படகில் வந்த தமிழக மீனவர்களிடம் ஒப்படைத்தனர். Source link

கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் முருகேஷுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’

சென்னை: கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் மு.முருகேஷுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது. மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களுக்கு ‘பால சாகித்ய அகாடமி விருது’ மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2021-ம்ஆண்டுக்கான சிறந்த தமிழ் சிறுவர் இலக்கிய நூலாக, கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன … Read more