’தமிழ் சமூகத்தின் சாபக்கேடு’ ‘என் காலனிகளுக்கு கூட’-பிடிஆர் Vs அண்ணாமலை ட்விட்டர் யுத்தம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, டிவிட்டரில், அந்த ஆட்டின்(சிம்பிள்) பெயரை கூட தான் குறிப்பிட விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார். தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச்சமூகத்தின் சாபக்கேடு என … Read more

இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்ப்பிணி பசு பரிதாபமாக உயிரிழப்பு!

கருவுற்றிருந்த பசுமாட்டை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கி வன்கொடுமை செய்ததில் பசுமாடு உயிரிழந்த கொடூர சம்பவம் வங்காளத்தில் நடந்தேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. வட சந்தன்பிடி பகுதியிலுள்ள நாம்கானா ப்ளாக்கில் வசித்து வருபவர் ப்ரத்யுத் புயியா. 29 வயதான இவர்மீது அண்டை வீட்டுக்காரர் ஆர்த்தி புயியா என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நள்ளிரவில் தங்கள் வீட்டிற்குள் பின்னால் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுமாட்டை … Read more

அடுத்த மாதம் திருச்சியில் இசை நிகழ்ச்சி நடத்தும் கார்த்திக் ராஜா!

மாணிக்கம், அலெக்சாண்டர், உல்லாசம், பிசாசு- 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவின் மூத்த மகனான இவர் அடுத்த மாதம் 24ம் தேதி திருச்சியில் ‛பொன்மாலைப் பொழுது' என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் என்னுடைய இசையில் உருவையான பாடல்கள் மட்டுமே பாடப்படும். ராயல்டி பிரச்னைகள் இருப்பதால் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் … Read more

பிலிம் ஃபேர் விருதில் அனைவரையும் மயக்கிய ஹன்சிகா.. எப்படி வந்தாங்க தெரியுமா?

சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி இந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருந்து வருகிறார். குட்டி குஷ்பூ என்று அழைக்கப்படும் இவர் தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போதும் மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். சின்ன குஷ்பூ ஹன்சிகா சின்ன குஷ்பூ என்ற பெயரை ரசிகர்களிடையே பெற்றுள்ளார் நடிகை ஹன்சிகா. ஆரம்பத்தில் இவர் நடிக்க வந்தபோது கொழுக் மொழுக் என்று தமிழக ரசிகர்களின் … Read more

பேஸ்புக்: அடுத்தடுத்து சேவைகள் மூடல்.. மார்க் ஜூக்கர்பெர்க் திட்டம் என்ன..?

பேஸ்புக் கேமிங் செயலி வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் தளத்தில் இருந்து நீக்க முடிவு செய்து, விரைவில் மூடப்படும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. சீனாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த லைவ் காமெர்ஸ் சேவையைப் பேஸ்புக் உலக நாடுகளில் லைவ் ஷாப்பிங் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. இந்தச் சேவைக்குப் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காத நிலையிலும், விரும்பாத நிலையிலும் பேஸ்புக் தனது லைவ் ஷாப்பிங் சேவையை … Read more

வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசிய இமாம் நாட்டில் இருந்து வெளியேற்றம்: ஃபிரான்ஸ்

இமாம் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் உயர் நிர்வாக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்று பிரான்சு நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான் தெரிவித்துள்ளார். வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசிய குற்றச்சாட்டுக்காக, இமாம் ஹசன் இக்யுஸ்சென், மொராக்கோவிற்கு நாடு கடத்தப்படுகிறார் என்று பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி கூறுகிறது. “குடியரசுக்கு ஒரு பெரிய வெற்றியாக” ஹாசன் இக்யுசென் “தேசிய பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்” என்று டார்மானின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மாநில கவுன்சிலின் … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் வருகின்ற ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.  உள்தமிழகம் பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பிருக்கிறது. வருகின்ற செப்டம்பர் … Read more

தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி துவக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை வகித்தார். மேலும், ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் தலைவர் முத்துச்செல்வம் மற்றும் ஜே.சி.ஐ தலைவர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புத்தக கண்காட்சியினை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க … Read more

டெல்லி கணேஷ், மணிகண்டன் காம்போவில் ஒரு ஃபீல் குட் மூவி! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணுவாக நடித்து நம் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம் “நரை எழுதும் சுயசரிதம்!”. இந்த ஆண்டு துவக்கத்தில் ஒடிடி-யில் வெளியானது. ஔவையாரின் “கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது, கொடிது கொடிது முதுமையில் தனிமை … Read more

காட்டாற்று வெள்ளத்தில் காருடன் சிக்கிய 6 பேர்.. டிராக்டரில் சென்று கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து 6 பேரை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். வள்ளிப்பட்டியில் கனமழை பெய்த நிலையில், அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது, வெள்ளோடு பகுதியில் வேலைக்கு சென்று திரும்பிய 6 பேர் மதுபோதையில் காரில் வந்த நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். இதனையடுத்து டிராக்டரில் சென்ற பொதுமக்கள் கயிறு கட்டி வெள்ளத்தில் … Read more