கேரளாவில் இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

மூணாறு : கேரளாவில் இன்று (ஆக.,1) முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தாண்டு தென் மேற்கு பருவமழை மே 29 துவங்கியது. கடந்தாண்டுகளை போன்று இந்தாண்டும் ஜூனில் மழை 53 சதவீதம் குறைவாக பதிவானது. ஜூலையில் முதல் இரண்டு வாரம் வட மாவட்டங்களில் மட்டும் பலத்த மழை பெய்த போதும் சராசரி அளவை விட 26 சதவீதம் குறைவு என கணக்கிடப்பட்டது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மழை சற்று அதிகம் … Read more

முடிந்தது கடைசி தேதி… ஐடிஆர் தாக்கல் செய்தவர்கள் எவ்வளவு பேர்?

வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என வருமான வரித்துறை அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 44 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நேற்றுடன் வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இதுவரை எத்தனை பேர் வருமான வரி தாக்கல் செய்து உள்ளார்கள் என்பதை பார்ப்போம். ITR 2022: … Read more

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு  

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபிவிருத்தியடைந்து வரும் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடியதுடன், பல துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார். இரு வழி உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானித்தனர். … Read more

‘பொன்னி நதி பார்க்கணுமே…’ பொன்னியின் செல்வன் சிங்கிள் டிராக்… ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் டிராக் என்கிற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பொன்னியின் … Read more

மது வாங்கி தராததால் நடந்த விபரீதம், நண்பனை கொலை செய்த சக நண்பர்கள்..!

மது வாங்கி தராததால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவர் அங்குள்ள மைதானத்தில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது.  அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை மர்ம் நபர்கள் அவரை அடித்து கொலை செய்ததை கண்டறிந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவரது நண்பர்கள்  தாக்கியது தெரியவந்தது.ரவியை தாக்கிய அவரது நண்பர்களான சவுகார்பேட்டையைச் சேர்ந்த காக்கா … Read more

பல்லாவரம் அருகே திரிசூலத்தில் கோயில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு சீல்

பல்லாவரம் அருகே திரிசூலத்தில் கோயில் இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் ஊராட்சி, சிவசக்தி நகரில் திரிசூல நாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்குச் சொந்தமாக, 61.4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஆக்கிரமித்து, 1,257 வீடுகள் கட்டப்பட்டு, மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் முறையாக வரி மற்றும் வாடகை செலுத்தாததால், இந்த இடத்தை … Read more

குஜராத் உட்பட 6 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: சேலத்தில் இளைஞர் கைது

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கண்டறிய 6 மாநிலங்களில் தேசியப்புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பிஹாரில் செயல்பட்ட தீவிரவாத குழுவினர், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாட்னாவில் ஆயுத பயிற்சி வழங்கி உள்ளனர். இந்தஆயுத பயிற்சியில் பங்கேற்றவர்களை கண்டறிய தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேசம், குஜராத், பிஹார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் … Read more

ஜனாதிபதி ரணில் பதவி விலகும் நாளை கணித்த பிரபல ஜோதிடர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகப்படி ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பின்னர் அவர் ஜனாதிபதி பதவியை துறக்க நேரிடும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார ஸ்திரமின்மையும் நிலவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தான் இவை அனைத்தையும் கூறுவதாகவும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்து … Read more

புகழ்பெற்ற எல்லோரா குகைகளில் விரைவில் ஹைட்ராலிக் லிப்ட் வசதி – தொல்லியல்துறை

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள், ஹைட்ராலிக் லிப்ட் வசதி கொண்ட நாட்டின் முதல் நினைவுச்சின்னம் என்ற சிறப்பைப் பெற உள்ளதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அந்த பாரம்பர்ய தளத்தில் மிகப் பழமையான இந்து, புத்தம் மற்றும் ஜைன மத அடையாளங்களும், சிலைகளும், கற்கோவில்களும் அமைந்துள்ளன. அங்குள்ள கைலாஷ் என்ற குகை, 2 மாடிகள் கொண்ட கட்டமைப்பு என்பதால் சுற்றுலாப் பயணிகள் படிகளை பயன்படுத்தி செல்கின்றனர். இந்நிலையில், சக்கர நாற்காலியில் செல்வோர் … Read more