பஞ்சப்பள்ளி அணையில் இருந்து 2,520 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

பஞ்சப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 2,520 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் பஞ்சப்பள்ளி(சின்னாறு) அணை உள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் மூலம் 4,500 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. அணையில் 50 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பஞ்சப்பள்ளி அணைக்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் முழு … Read more

அண்ணாமலை கருத்து கந்தசாமி போல ….. – கே.எஸ்.அழகிரி காட்டம்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாக குறைந்திருப்பதாகவும், அதன் பொருள் இந்திய நாட்டின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் வீழ்ந்திருக்கிறது என கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.பாஜக சோதனை என்ற பெயரில் விசாரனை அமைப்புகளை ஏவல் நாய்கள் போல் அவிழ்த்து விடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் … Read more

குழந்தை பெற்றால் பெற்றோருக்கு மாதம் ரூ.60,000.. மக்கள் தொகையை அதிகரிக்க தென் கொரியா புதிய திட்டம்..!

தென் கொரியாவில் மக்கள் தொகையை அதிகரிக்க, குழந்தை பெற்றால் பெற்றோருக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் தென் கொரியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், 2001ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்தது. கடந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு 2 லட்சத்து 66 ஆயிரமாக குறைந்தது. பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் குறைந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டு வந்த நிலையில், மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக … Read more

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ காலமானார். இத்தாலியில் வசித்து வந்த பாலோ மைனோ அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 90 வயதை தாண்டிய தனது தாயாரை காண கடந்த வாரமே சோனியா காந்தி இத்தாலி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், கடந்த 27-ந் தேதி சனிக்கிழமை பாலோ மைனோ காலமானார். ஞாயிற்றுகிழமை அவரது சொந்த ஊரில் நடைபெற்ற இறுதி சடங்கில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். சோனியாகாந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் … Read more

விபத்தில் 200 அடிக்கு சாலையை மூடிய தக்காளிகள்: கலிபோர்னியாவில் பரிதாபம்!

கலிபோர்னிய சாலையில் கொட்டிய 1,50,000 தக்காளிகள். உலகின் தக்காளி ஏற்றுமதியில் பாதியளவு கலிபோர்னியாவில் உற்பத்தி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 1,50,000க்கும் அதிகமான தக்காளிகள் சாலையில் கொட்டி போக்குவரத்தில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மீது தக்காளியை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி பிறகு அங்குள்ள செண்டர் மீடியனில் லொறி மீண்டும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கலிபோர்னியா நெடுஞ்சாலை முழுவதும் சுமார் … Read more

தமிழ்நாட்டில் இன்று 491 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 76…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 76, செங்கல்பட்டில் 29, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 67, திருநெல்வேலி 11, தூத்துக்குடி 8, சேலம் 36, கன்னியாகுமரி 24, திருச்சி 11, விழுப்புரம் 8, ஈரோடு 33, ராணிப்பேட்டை 13, தென்காசி 1, மதுரை 3, திருவண்ணாமலை 11, விருதுநகர் 9, கடலூர் 8, தஞ்சாவூர் 4, திருப்பூர் 16, … Read more

சாலை விநாயகர், வெள்ளை பிள்ளையார், மாயப்பிள்ளையார் நூதன பெயர்களால் கவனம் ஈர்க்கும் விநாயகர் கோயில்கள்

*வியப்பில் ஆழ்த்தும் சேலம் சரகம்*சதுர்த்தி நாளில் பக்தர்கள் பெருமிதம் சேலம் : நூதன பிள்ளையார் கோயில்களால் சேலம் சரகம் கவனம் ஈர்த்து வருவதாக பக்தர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். அசுரர்களின் துன்பத்தில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த சிவனும், பார்வதியும் அளித்த பரிசு தான் கணங்களின் நாயகனான விநாயகப் பெருமான். அவர் அவதரித்த ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்திநாளில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்படுகிறது.  இந்தவகையில் நாடு … Read more

”இதுக்குத்தான் பைக் திருடினேன்”..கொலை குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்! மிரண்டுபோன போலீசார்

காவல் நிலையத்தில் கையெழுத்திட தினமும் பேருந்தில் பயணம் செய்து சோர்வடைந்ததால், இருசக்கர வாகனத்தை திருடியதாக கொலைக் குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். 40 வயதான இவர், ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் உள்ள பார்க்கிங்கில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இரவு வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு … Read more

செப்., 9ல் ‛யசோதா' டீசர் வெளியீடு

ஹரி – ஹரிஸ் இயக்கத்தில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛யசோதா'. உன்னி முகுந்தன், வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் செப்., 9ல் அன்று மாலை 5:49 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகிறது. அன்றைய தினமே படத்தின் புதிய வெளியீட்டு தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆக., 12லேயே படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போஸ்ட் … Read more

பணத்திற்காக இப்படியா?.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்..பதறிய சிவாஜி வில்லன் சுமன்!

சென்னை : நடிகர் சுமனின் உடல்நிலை குறித்து இணையத்தில் பரவிய தகவலுக்கு மிகவும் கடுமையாக தனது கண்டனத்தை பகிர்ந்துள்ளார். 1979ம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா தயாரித்த நீச்சல் குளம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார் சுமன். சினிமாவில் ஏறக்குறைய 4 தசாப்த கால வாழ்க்கையில், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்கள் என கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர் சுமன் பழம்பெரும் நடிகரான சுமன் தெலுங்கில் வெங்கடேஸ்வரா, சிவன், ராமர் … Read more