கியூபாவின் புரட்சி நாயகன் சே குவேராவின் மகன் கமிலோ மறைவு

கியூபாவின் புரட்சி நாயகரான சே குவேராவின் மகன் கமிலோ குவேரா நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 60. இதனை கியூபா அரசு தரப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர் வெனிசுலாவுக்கு பயணம் மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அலீடா மார்ச் மற்றும் சே குவேரா தம்பதியருக்கு பிறந்த 4 பிள்ளைகளில் இவர் ஒருவர். இவர் அவர்களுக்கு பிறந்த மூன்றாவது மகன் ஆவார். ஹவானாவில் சே குவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக அவர் பணியாற்றி வந்துள்ளார். சே … Read more

அரசின் உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா..? மக்கள் நீதி மய்யம் கேள்வி..!

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதை கண்டித்து மக்கள் நீதி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று … Read more

மரியாதை நிமித்தம் குடியரசுத் தலைவரை சந்தித்தது மகிழ்ச்சி: சத்குரு

கோவை: ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி என ஈஷா அறக்கட்டளையின் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். 16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சத்குரு சந்தித்தார். இது குறித்து சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குடியரசுத் தலைவருடன் அவரது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன. சத்குருவின் டெல்லி பயணம் நிறைவானதாக இருந்ததாக கூறப்படுகிறது. A … Read more

“நீங்கள் அரசியலுக்கும் இந்த மாநிலத்துக்கும் சாபக்கேடு” – பி.டி.ஆர். குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமான பதிவு

தீவிரவாதிகள் தாக்குதலில் ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆகஸ்ட் 13 ம் தேதி மதுரை விமான நிலையம் வந்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது நடைபெற இருந்த தாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசிய மூன்று பெண்கள் உட்பட பாஜக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு … Read more

‘உனக்கு 28 எனக்கு 61’..! இளம்பெண்ணுக்கு முதியவருடன் டும்..டும்..: புதுவையில் வீடியோ வைரல்

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த முதியவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான அவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது மனைவி இறந்ததில் இருந்து, தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்து கொள்ள துணை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் உறவினர்களிடம் புலம்பியுள்ளார். இதையடுத்து அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் நிலமையை எடுத்து கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். முதியவரை திருமணம் செய்து கொண்டு பிரான்சு செல்லவும் சம்மதித்துள்ளார். நேற்று முன்தினம் காலை … Read more

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு விபத்தில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு விபத்தில் மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். இனையம் புத்தன் துறை கிராமத்தை சேர்ந்த மீனவர் அமல்ராஜ் உடலை சக மீனவர்கள் மீட்டனர்.

பேக்கரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி ‘ஐஸ்’ போதை பொருள் பறிமுதல்

இம்பால்: பேக்கரி மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த ரூ.50 கோடி மதிப்பிலான  ‘ஐஸ்’ போதை பொருளை மணிப்பூர் போலீசார் அதிரடியாக மீட்டு, சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மணிப்பூர் ரைபிள்ஸ் (எம்ஆர்) படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மணிப்பூர் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்தினர். அப்போது இம்பாலை சேர்ந்த பிஷ்னு பானிக் (32) என்பவனிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான … Read more

இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு! தெருக்குழாயை மூடி கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தெக்களூர் ஊராட்சியில் இருளர் காலனியில் 30க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தெரு குடிநீர் குழாய் அருகே சிமெண்ட் சாலை … Read more

’என்னை திருமணம் செய்துகொள்’.. மறுத்த காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞரும் விபரீத முடிவு!

மத்திய பிரதேசத்தில் திருமண புரோபசலை நிராகரித்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் கவலைக்கிடமாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்திலுள்ள இந்திரா சாகர் டேம் கிராமத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர் பக்கத்து கிராமத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனது கிராமத்திலுள்ள 20 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அணுகியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பப்லு திங்கட்கிழமை அந்த … Read more

ஆகஸ்ட் 31 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) 1. கோப்ரா – ஆகஸ்ட் 31 2. நட்சத்திரம் நகர்கிறது – ஆகஸ்ட் 31 3. Ranga Ranga Vaibhavanga (தெலுங்கு) – செப்டம்பர் 2 4. Palthu Janwar … Read more