FIFA உலக கோப்பை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்த புதிய விசா..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நிர்வாகம் கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை காண வரும் பயணிகளுக்குப் புதிதாக ஒரு பலமுறை UAE நாட்டிற்குள் நுழையக் கூடிய விசாவை அறிவித்துள்ளது. 22வது FIFA உலகக் கோப்பைப் போட்டி 2022 ஆம் ஆண்டின் 20 நவம்பர் 20 முதல் 18 டிசம்பர் 2022 வரை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இது அரபு நாடுகளில் நடைபெறும் முதல் உலகக் கோப்பையாகும், மற்றும் 2002 ஆம் ஆண்டுத் தென் … Read more

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர் நிதியுதவி; சேகுவாராவின் மகன் மரணம்… உலகச் செய்திகள்

America aid 30 million dollar to Pakistan today world news: இன்று உலக நாடுகள் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்த மிகைல் கோர்பச்சேவ் மரணம் பனிப்போரை இரத்தம் சிந்தாமல் முடிவுக்கொண்டு வந்தவரும் ஆனால், சோவியத் யூனியனின் சரிவைத் தடுக்கத் தவறிவிட்டவருமான மிகைல் கோர்பச்சேவ், செவ்வாயன்று தனது 91 வயதில் இறந்தார் என்று மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஜனாதிபதியான கோர்பச்சேவ், இரண்டாம் உலகப் … Read more

இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார்.. புதுப்பெண் உள்ளிட்ட மூவர் பலி..!

இருசக்கர வாகனம் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், வேலூர் செல்லும் ரோட்டில் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில் திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ் (வயது 35), சுப்பிரமணி (50) தங்களது இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சென்று கொண்டிருந்தனர்.  அதே வேளையில் திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சேர்ந்த சிவசக்தி நகர் ராமகிருஷ்ணன் என்பவர் வேலூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக காரும் பைக்கும் … Read more

“ஃபெயிலாக்குவியா… ஃபெயிலாக்குவியா?!" – ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்

மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால் ஆசிரியர்கள் அவர்களை தண்டிப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண்கள் கொடுத்த ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தும்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண்களைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகமான மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்திருந்தனர். வைரல் வீடியோ செயல்முறை தேர்வு மதிப்பெண்களை சேர்க்கவில்லை என்று … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. … Read more

ஜனனி சுரக்‌ஷா யோஜனா | தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதியுதவி

சென்னை: ஜனனி சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜனனி சுரக்‌ஷா யோஜனா மத்திய அரசால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் குறைக்க செயல்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நகர்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 700 ரூபாயும், கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் 2019-20ம் ஆண்டில் 4,21,182 … Read more

​வலைவிரிக்கும் பாஜக… சிக்குவாரா திமுக எம்பி?

குஷ்புவாக இருந்தாலும் சரி… டாக்டர் சரவணனாக இருந்தாலும் சரி… வேறு கட்சியில் இருந்து வந்து பாஜகவில் இணைபவர்களுக்கு ராஜ மரியாதைதான். இப்படி ராஜ மரியாதை கொடுத்து வேற்று கட்சிகளில் லோக்கல் வெயிட்டாக உள்ள நபர்களை தட்டித் தூக்குவதில் பாஜகவை அடிச்சிக்க ஆளே இல்லை என்று சொல்லலாம். இதற்கு திமுகவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, ஜெயலலிதாவின் விசுவாசியாக அறியப்பட்ட நயினார் நாகேந்திரன் ஆகிய இருவர்தான் ஆகச் சிறந்த உதாரணங்கள். இவர்களின் வரிசையில் தற்போது … Read more

சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் காலமானார்..! – தலைவர்கள் இரங்கல்..!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சமூக ஊடக பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார். சோனியா காந்தியின் தாயார் மறைவிற்கு பலர் தங்கள் இரனகளை தெரிவித்து வருகின்றனர்.

இறப்பை முன்னரே கணித்த பழங்குடியின மனிதர்: என்ன செய்தார் தெரியுமா?

பிரேசிலில் இருக்கும் அமேசான் மலைக்காடுகள் உலகிலேயே மிகப்பெரிய வனப்பகுதியாகும். இந்த அமேசான் காடுதான் பூமியின் தட்ப வெப்பத்தை பெரிய அளவில் காத்து வருகிறது. இந்த அடர்ந்த காட்டுக்குள் பழங்குடி இன குழுக்கள் பலவும் வசித்து வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஆக்கிரமிப்பாளர்கள் அமேசான் காடுகளை அழித்து வருவதாகவும், அங்கு வாழும் பழங்குடியினரான பூர்வ குடிகளை கொன்று குவித்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பழங்குடியின குழுக்கள் கொல்லப்பட்டு வந்துள்ளனர். அந்த வகையில், … Read more

நிதிஷ்குமார் – சந்திரசேகரராவ் சந்திப்பு : எதிர்க்கட்சிகளின் நகைச்சுவை என பாஜக விமர்சனம்

பீகார் சென்றுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரையும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளையும் சந்திரசேகர ராவ் வழங்கவுள்ளார். மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருபவரான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் முயற்சித்து வருகிறார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் … Read more