இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி.. வேற லெவல்..!

தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டின் 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் (Q1) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் GDP 20.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் மிதமானதாகவும் மற்றும் சேவைத் துறையின் செயல்பாடுகள் வளர்ச்சியை அதிகரித்த காரணத்தாலும் பெரும் சரிவில் இருந்து இந்திய தப்பித்துள்ளது. 2021-22க்கு முந்தைய ஜனவரி-மார்ச் காலாண்டில் (Q4) GDP 4.1 சதவீத வளர்ச்சியைக் … Read more

சீனா – ஜப்பானை அச்சுறுத்தும் உலகின் மிக வலிமையான Hinnamnor சூறாவளி!

உலகின் மிக வலிமையான புயல்: வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் சிக்கலில் உள்ள ஜப்பான் மற்றும் சீனாவுக்கு மற்றொரு பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது.  2022 ஆம் ஆண்டின் வலுவான உலகளாவிய புயலால் இந்த இரு நாடுகளும் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த புயல் கிழக்கு சீனக் கடல் வழியாக ஜப்பானின் தெற்கு தீவுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஹிமானோர் தற்போது மணிக்கு 160 மைல் அதாவது மணிக்கு 257 கிமீ வேகத்தில் நகரும் நிலையில், இதன் காரணமாக, … Read more

படம் தோல்வி; ரூ.100 கோடி சம்பளத்தை தியாகம் செய்யும் நடிகர் ஆமீர் கான்!

சமீபத்தில் நடிகர் ஆமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பது குறித்து ஆமீர் கான் ஆலோசித்து வருகிறார். இப்படத்திற்காக ஆமீர் கான் நான்கு ஆண்டுகள் தனது உழைப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் படம் தோல்வி அடைந்திருப்பது ஆமீர் கானை மிகவும் பாதித்துள்ளது. இதையடுத்து படத்தயாரிப்பாளருக்கு ஏற்படும் இழப்பை … Read more

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவணபாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் மகேந்திரவாடியை சேர்ந்தவர் சரவண பாண்டியன். ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளரான இவர், அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் தலைவராக உள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு போன் செய்து, ஆரம்பத்தில் நன்றாக பேசினார். பின்னர் திடீரென நீங்கள் பூலித்தேவன் ஜெயந்தி விழாவுக்கு தென்காசிக்கு வரும் போது உங்களுக்கு பாடை கட்டி மாலையோடு காத்திருக்கிறோம் என கொலை மிரட்டல் … Read more

விநாயகர் சதுர்த்தி | கிருஷ்ணகிரியில் 12-வது ஆண்டாக பூஜை பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 12-வது ஆண்டாக இஸ்லாமியர்கள் பூஜை பொருட்களை வழங்கினர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சீனிவாசா நகரில் பொதுமக்கள் முழுவதும் களிமண்ணால் ஆன 12 அடி உயர பிள்ளையார்பட்டி விநாயகர்சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த விநாயகர் சிலைக்கு, மிலாடி நபி விழா குழுவின் தலைவர் அஸ்லாம் தலைமையில் இன்று (ஆக.31) பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பழங்கள் … Read more

மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றிய உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற கிளை அதிரடி!

மருமகளிடம் இருக்கும் வீட்டை மீட்டு மாமனார்,மாமியாரிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த காயத்ரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் மதுரை சூர்யா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான இல்லத்தில் குடியிருந்து வருகிறேன். இந்நிலையில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் அவர்களது குடும்பத்தினர் ஒன்றாக … Read more

வாஸ்கொடகமா யுகத்தை வேகமாக விழுங்கும் சீனயுகம்

Courtesy: தி.திபாகரன் MA கடந்த ஐந்து நூற்றாண்டுகள் இந்து சமுத்திரத்தை பற்றிப் பிடித்திருந்த வாஸ்கொடகாமா யுகத்தை இந்த நூற்றாண்டின் அரைவாசி பகுதிக்குள் சீனயுகம் விழுங்கிவிடும் அபாயம் தோன்றியிருக்கிறது. சீனயுகத்தின் பட்டுப்பாதையின் இருதயப் பகுதி இந்து சமுத்திரமாகும். இப்பாதையில் கேந்திரப் புள்ளியாக இலங்கைதீவு அமைந்துள்ளது. சீனயுகம் இலங்கைத்தீவில் மையம் கொண்டிருப்பதனால் ஈழத் தமிழினத்தினதும், இந்தியாவினதும் எதிர்காலம் சீன யுகத்தை எதிர்கொள்வதிலேயே தங்கி உள்ளது. இந்த பூமிப் பந்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தமது வாழ்வுக்காக இயற்கையுடன் இடையூறாது போராடுகின்றன. … Read more

பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா?

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் வெற்றி வெற்றி பெற பாஜக, பீகாரில் பெரும் பின்னடைவை சந்தித்தது. நாடு முழுவதும் “ஆபரேஷன் தாமரை” திட்டத்தின் மூலம், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது அல்லது ஆளும் அரசுடன் அங்கம் வகிப்பது என பாஜக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை வெற்றியடைந்தது. ஆனால் டெல்லி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் “ஆபரேஷன் தாமரை” தோல்வி அடைந்துள்ளது. … Read more

போர் விமானங்களின் திறனை அதிகரிக்கும் பிளாஸ்மா சாதனத்தை உருவாக்கியுள்ள சீன விஞ்ஞானிகள்..!

எதிரிகளின் ரேடாரால் கண்டறிய முடியாதபடி பயணிக்கும் போர் விமானங்களின் திறனை அதிகரிக்கும் வகையிலான பிளாஸ்மா சாதனத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதிவேகத்தில் பயணிக்கும் குண்டு வீச்சு விமானங்கள் அதன் வேகத்தை நடுவானில் குறைக்கும் போது, காற்றின் வேக  மாறுபாடால் விமானம் ஸ்தம்பித்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க, பிளாஸ்மா சவ்வு கொண்ட சாதனம் விமானத்தின் இறக்கைகளில் பயன்படுத்தும் போது, நடுவானில் விமானத்தின் இறக்கைகளில் ஏற்படும் காற்று மாறுபாட்டின் தாக்கத்தை முன்கூட்டியே உணர்ந்து விமானிக்கு அது … Read more

Cobra Review: விக்ரம் என்னும் மகாநடிகன்; அடடே இர்ஃபான் பதான்; ஆனால் படமாக `கோப்ரா' எப்படி?

கணித அறிவை வைத்து தடயமே இல்லாமல் கொலைகள் செய்யும் சர்வதேச கொலைகாரனுக்கும் அவனைத் தேடும் இன்டர்போல் அதிகாரிக்கும் நடக்கும் பாம்பு – கீரி யுத்தமே இந்த `கோப்ரா’. சர்வதேச அளவில் இறங்கி மாட்டிக்கொள்ளாமல் கொலைகள் செய்கிறார் கணித மேதையும், வாத்தியாருமான மதியழகன். ஸ்காட்லாந்தில் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதும், அந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் இன்டர்போல் அதிகாரியான அஸ்லாம். அதற்கும் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கொலைக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து இங்கே வந்து இறங்குகிறார். அவருக்கு … Read more