காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் காலமானார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பவ்லா மானியோ காலமானார். 90 வயதான பவ்லா மானியோ கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆகஸ்ட் 23 ம் தேதி சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் அவரை காண வெளிநாடு சென்றனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 27 ம் தேதி அவர் காலமானதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் … Read more

திருத்தணி முருகன் கோயில் குடியிருப்பில் மட்டன் சாப்பிட்டு அதிகாரிகள் கும்மாளம்: சமூகவலை தளத்தில் வீடியோ வைரல்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான குடியிருப்பில் மட்டன், சிக்கின் சாப்பிட்டு அதிகாரிகள் கும்மாளமிட்டது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பஸ், ரயில்களில் பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வருகின்ற பெரும்பாலான பக்தர்கள், கோயில் வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருந்து மறுநாள் அதிகாலையில் அபிஷேகம் தரிசனம் … Read more

கனமழை எதிரொலி: வைகை அணையில் இருந்து 4,800 கனஅடி நீர் திறப்பு..!!

தேனி: வைகை அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 4,006 கனஅடியில் இருந்து 4,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 70 அடியாக உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ காலமானார்..!!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் காலமானார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர், பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்றும் சோனியா காந்தியின் தாயாரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார்.

திண்டுக்கல்: தார்ச்சாலை பள்ளங்களை செம்மண்ணை கொட்டி சரிசெய்த அதிகாரிகளால் மக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் குண்டு குழியுமாகக் கிடந்த தார்ச்சாலையில் செம்மண் கொட்டி பேஜ் ஒர்க் பார்த்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மீது வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் பெய்து வரும் மழை காரணமாக சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மதுரை – கொடைக்கானல் முக்கியச் சாலையாகவும் திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ள இச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் … Read more

மாறி மாறி அட்டாக்.. போரில் சண்டையிட்டுக்கொள்ளும் ரஷ்ய – உக்ரைன் வீரர்கள்.. விடாத மோதல்!

International oi-Halley Karthik கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகிவிட்டன. போர் இன்னமும் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது போர் குறித்த வீடியோ கட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த போர் காரணமாக உக்ரைன் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் போர் இன்னும் முடிவுறா நிலையில், ரஷ்ய வீரர்களும் உக்ரைன் வீரர்களும் மாறி மாறி சண்டையிடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன. சோவியத் … Read more

ஆம் ஆத்மி தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை: டில்லி கவர்னர் முடிவு| Dinamalar

புதுடில்லி: தன் மீது மிகவும் அவதூறு மற்றும் பொய்யான ஊழல் புகாரை கூறியதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் அடிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க டில்லி கவர்னர் சக்சேனா முடிவு செய்துள்ளார். கடந்த 2016ல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷனின் தலைவராக இருந்த துணை நிலை கவர்னர் சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை … Read more

தியேட்டரில் படக்குழுவுடன் கோப்ரா படம் பார்த்த விக்ரம்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படம் 1500 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் விக்ரம் தனது மகனுடன் கோப்ரா படம் பார்க்க வந்திருந்தார். அவரை … Read more

என்னய்யா இப்படியாகிபோச்சு.. ‘கோப்ரா‘வை பிளாப் லிஸ்டில் சேர்த்த ரசிகர்கள்!

சென்னை : சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியான கோப்ரா படத்தை நெட்டிசன்ஸ் அதற்குள் பிளாப் லிஸ்டில் சேர்த்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கோப்ரா ‘டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்’ … Read more

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் Q1ல் 12 -16% வளர்ச்சி காணலாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு!

இந்தியா பொருளாதார வளர்ச்சி விகிதமானது முதல் காலாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் – ஜூன் 2022 காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி தரவானது, இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜூன் காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான வளர்ச்சி விகிதமானது 16.2% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கும்.. நிர்மலா சீதாராமன் பதில்..! ஜிடிபி கணிப்பு பல நிபுணர்களும் இந்த ஜிடிபி குறித்தான … Read more