கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சுற்றுச்சுவர் இடிந்து 12 வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..!!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரசீதா (35), தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சிறுமி சஹானா (12) உயிரிழந்தனர். சுவர் விழுந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ரபிக்குள் இஸ்லாம் (22), ஹேமாவதி (12) உள்ளிட்ட 3 பேர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.