மின் கட்டண உயர்வுக்கு தடை தொடருமா, விலகுமா? – அரசின் மனு மீது ஐகோர்ட் நாளை விசாரணை

மதுரை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் … Read more

கொரோனா காலத்தில் போடப்பட்ட 9 லட்சம் வழக்குகளின் நிலை என்ன?

தேசிய குற்ற ஆவண மையத்தின் (என்சிஆர்பி) 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை, காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என தெரிவிக்கிறது. 2021 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு அந்த ஆண்டு இறுதியில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த வழக்குகளில் சுமார் 20 சதவீத வழக்குகள் தமிழ்நாட்டில் இருந்தன என அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் காவல் … Read more

2024 தேர்தலுக்கு ஆயத்தம் – நிதிஷ் குமாருடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு!

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் சந்தித்தார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தெலங்கானா மாநில முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, பீகார் … Read more

தைவான் நாட்டின் கடல் எல்லைக்குள் சீனாவின் டிரோன்..! விரட்டி அடித்த தைவான்..!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக இரவு தைவானுக்கு சென்றார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். நான்சி பொலேசியின் இந்த பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்சி பொலேசியின் பயணத்தை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் 4 முறை தைவானுக்கு சென்றனர். தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்வதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்வினையாக சீனாவின் ராணுவம் தைவான் நாட்டை சுற்றி … Read more

இரண்டாவது நாளே பழுதடைந்து நின்ற இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர் கப்பல்!

இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்க பயணத்தை தொடங்கிய இரண்டாவது நாளே பழுதடைந்து நின்றது. இங்கிலாந்து கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான Prince of Wales, 4 மாத பயணமாக 1,600 வீரர்கள் மற்றும் எப்-35 ஜெட் விமானங்களுடன் போர் பயிற்சிக்காக அமெரிக்கா புறப்பட்டது. 65,000 டன் எடையிலான இந்த கப்பல், போர்ட்ஸ்மவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 2-வது நாளே பழுதடைந்து நின்றது. கப்பலில் ஏற்பட்ட … Read more

என்ஜின் தீ விபத்து காரணமாக சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை!

சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை விதித்ததையடுத்து அதைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்திடம் 400 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்த ஹெலிகாப்டர்களில் தொடர்ந்து என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அதனைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிடம் 15 சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஹெலிகாப்டர்களை தயாரித்த அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது. … Read more

சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான பலகோடி மதிப்பிலான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு!

சென்னை: தமிழ்நாட்டில் திருடு போன பல சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகளை சிலை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை யில் ஒருவரது வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு … Read more

சேலத்தில் புத்துயிர் பெறும் நீர்நிலைகள் ஏரிகளை சீரமைக்க ₹52 கோடியில் புதிய திட்டம்

*அரசு அனுமதிக்கு மாநகராட்சி அறிக்கை சேலம் :  சேலத்தில் மூக்கனேரி உள்பட 3 ஏரிகளை மறுசீரமைப்பதற்கு  ₹52 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிர்வாக இயக்குனர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில், ஏரிகளை சீரமைப்பதற்கும், நீர் ஆதாரத்தை பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கடந்த 1911ம் ஆண்டு பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது.  சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இந்த ஏரி … Read more

மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்.22ல் காசி யாத்திரை ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 22ல் காசி யாத்திரை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னையில் இருந்து காசி யாத்திரை ரயில் இயக்கப்படவுள்ளது.

ஒன்றிய அரசு தன் கையிருப்பில் இருந்து 15 லட்சம் டன் கொண்டை கடலையை மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டம்..!!

டெல்லி: ஒன்றிய அரசு தன் கையிருப்பிலிருந்து 15 லட்சம் டன் கொண்டை கடலையை மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசு கொள்முதல் செய்த விலையைவிட கிலோவுக்கு ரூ.8 குறைத்து மாநிலங்களுக்கு கொண்டை கடலை வழங்கப்படும். ஒன்றிய அரசு தரும் கொண்டை கடலையை மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டம், மதிய உணவு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்.