அமெரிக்க நிறுவனங்களை ஓடவிடப்போகும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?

ரிலையன்ஸ் ரீடைல் கொரோனா தொற்று காலத்தின் துவக்கத்தில் பிற நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வதைத் தாண்டி சொந்தமாகப் பொருட்களைத் தயாரித்துத் தனது கடைகளிலும், ஈகாமர்ஸ் தளத்திலும் விற்பனை செய்யத் துவங்கியது. அந்த வகையில் தற்போது அமெரிக்க நிறுவனங்களான கோக்கோ கோலா மற்றும் பெப்சி ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப்போடப் புதிதாக ஒரு பிராண்ட் மற்றும் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த முறை முகேஷ் அம்பானி புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கக் கையில் எடுத்துள்ள ஆயுதம் nostalgia. இதற்காக முகேஷ் அம்பானி முதலீடு … Read more

பாகிஸ்தானின் அவலநிலை தொடர்கிறது! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்

கராச்சி: பாகிஸ்தானில் கடுமையான பருவமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், சில நாட்களில் 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் கொன்றது. பாகிஸ்தானின் சார்சடாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து, நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்த குடும்பங்கள் வாழ்க்கையை இனி எப்படி எதிர் கொள்ளப்போகிறோம் என்று கவலையுடன் நாட்களை கழித்துக் கொண்டு இருக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வரும் மக்களின் நிலைமையை பார்வையிட, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளார். … Read more

விநாயகர் சிலை தயாரிக்கும் கைவினைஞர்கள் நிலை என்ன? நேரடி ரிப்போர்ட்

Chennai Tamil News: இன்று (ஆகஸ்ட் 31ம் தேதி) கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வாங்க மக்கள் ஆரவாரத்துடன் கடைகளுக்கு செல்வதால், விநாயகர் சிலைகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சென்னையில் சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் பாரம்பரிய மையமான புரசைவாக்கம் அருகே கொசப்பேட்டை இருண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறது.  கொசப்பேட்டையில் உள்ள கைவினைஞர்கள் இந்தாண்டு விறுவிறுப்பான வியாபாரத்தை எதிர்பார்த்து தங்கள் வீடுகளிலும் குடோன்களிலும் 500-1,500 சிலைகளை குவித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் புதிய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை; உள் நோக்கம் என்ன ?

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்‌ நிறுவனத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடி பகுதியில் புதிய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை‌ கட்டுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. CPCL | பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை‌ `இலவசம்’ என்ற பெயரில் விவசாயத் திட்டங்களை நிறுத்துவது துரோகம்! பி.ஆர்.பாண்டியன் நாகையில் 0.5 மில்லியன் டன் திறனுடைய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை 1993 -ல் தொடங்கப்பட்டு பின்னர் 1 மில்லியன் டன் திறனுடைய சுத்திகரிப்பு ஆலையாக மேம்படுத்த‌பட்டு … Read more

ஸ்கெட்ச் பென்சில் மற்றும் ஜாமெட்ரி பாக்ஸ் கொண்டு அமைக்கப்பட்ட 18 அடி உயர விநாயகர் சிலை!

சென்னையை அடுத்த மணலி அருகே பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஸ்கெட்ச் பென்சில் மற்றும் ஜாமெட்ரி பாக்ஸ் கொண்டு அமைக்கப்பட்ட 18 அடி உயர கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மணலியை அடுத்த சின்ன சேக்காடு, காந்திநகர் பகுதியில் சர்வ மங்கள விநாயகர் கோயில் நிர்வாகம் சார்பில் 35,000 ஸ்கெட்ச் பென்சில் மற்றும் 800 ஜாமெட்ரி பாக்ஸ் கொண்டு 18 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் … Read more

குரங்கனி தீ விபத்து வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு; பெல்ஜியம் நபரின் கோரிக்கை நிராகரிப்பு

மதுரை: குரங்கனி தீ விபத்து வழக்கை ரத்து செய்யக் கோரி பெல்ஜியத்தை சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை பாலவாக்கத்தில் வசிப்பவர் பீட்டர் வான் கெய்ட். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சென்னை டிரக்கிங் கிளப்பை 2013-ல் தொடங்கி நடத்தி வருகிறேன். எங்கள் அமைப்பை சேர்ந்த திவ்யா முத்துக்குமார், நிஷா ஆகியோர் 4 ஆண்டுக்கு முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு சில குழுக்களை … Read more

ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம்!

7ஆவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு கோரி வேளாண் துறை தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் தொடர்ந்த வழக்கில், 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, ஊதிய … Read more

பாஜகவை அதன் பாணியிலேயே அடிக்கும் கெஜ்ரிவால்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காவிக் கொடியை பறக்க விட்டு பலம்வாய்ந்த அரசியல் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதற்காக அக்கட்சி மேற்கொண்ட செயல்திட்டங்கள் ஏராளம். எட்டு ஆண்டுகளை கடந்து மத்தியில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், 2024 தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என அமித் ஷா சூளுரைத்துள்ளார். அதேசமயம், பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களையும் எதிர்க்கட்சிகள் வகுத்து வருகின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை பலனளிக்கவில்லை. மாறாக, பாஜகவின் … Read more

பேருந்து நிறுத்தம் மீது மோதிய லாரி – குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!

பேருந்து நிறுத்தம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல காத்திருந்த குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிகசி நகரில் ஆரம்பப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் நேற்று வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்த பள்ளிக் குழந்தைகள் 20 பேர் வீட்டிற்கு செல்வதற்காக அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர். குழந்தைகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த … Read more

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி: இந்தியாவில் மற்ற மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (செவ்வாய்கிழமை) கூறியுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏஎஸ் ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற வழக்கின் மனு விசாரணை வந்தது. அந்த மனு மீதான 3 வாரங்களுக்குள் மத்திய அரசு … Read more