உலகின் நீளமான வெள்ளரிக்காய்… கின்னஸில் இடம் பிடித்த விவசாயி!

கின்னஸ் உலக சாதனை (GWR) உலகில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், வினோதமான தருணங்களையும், அரிய செயல்கள் செய்யும் மனிதர்கள் உட்பட பலரையும் சாதனை புத்தகத்தில் சேர்த்து பெருமைப்படுத்தி வருகிறது. கின்னஸில் இடம் பிடித்த விவசாயி செபாஸ்டின் சுஸ்கி தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட நெல் உற்பத்தி; செப் 1 முதல் நெல் கொள்முதல் தொடக்கம்! உலகிலேயே மிகப்பெரிய சிக்கன் நக்கெட் தயாரிக்கும் சமையல் கலைஞர்கள் முதல் 3 நிமிடங்களில் அதிக ஜாம் டோனட்களை சாப்பிட்ட பெண் வரை மனிதர்களின் … Read more

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 14,618 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக விநாடிக்கு 14618 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார். தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஓசூர், சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று … Read more

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு – அரசுக்கு பறந்த கோரிக்கை!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2022 – 23ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 75 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 100 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நெல்லுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கும் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை:  தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி கோவை உள்பட பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புஉள் உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்றம்,  விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, திருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்ய … Read more

கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்தது

*50 அடி உயரத்திற்கு மேலே தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு தோகைமலை : கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஒட்டசத்திரம் பகுதியில் உள்ள 1276 கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் செல்கிறது. இந்த காவிரி குடிநீர் திட்டமானது தரகம்பட்டி, மைலம்பட்டி வழியாக … Read more

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரம்: விழுப்புரம் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ..!!

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் விழுப்புரம் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் மாயமானது.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் குறைவாக மதிப்பெண் போட்ட பள்ளி ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் குறைவாக மதிப்பெண் போட்டதால் பள்ளி ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் தாக்கினர். செய்முறை தேர்வில் குறைவான மதிப்பெண் போட்டதால் பாடங்களில் தோல்வியை தழுவியதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செய்முறை தேர்வு மதிப்பெண்ணை தலைமை ஆசிரியர் கணக்கிடாததே மாணவர்களின் தோல்விக்கு காரணம் என பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

“முதல்வராக விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்”- வானதி சீனிவாசன்

ஒரு கட்சியின் தலைவராக இல்லாமல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என கோவையில் வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். கோவை காந்திபுரம் 48வது வார்டில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more

செய்முறை தேர்வில் தோல்வி.. ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்.. பரபர சம்பவம்!

India oi-Yogeshwaran Moorthi ராஞ்சி: ஜார்க்கண்டில் செய்முறைத் தேர்வில் 11 மாணவர்கள் தோல்வியடைய செய்ததால், ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள சூழலில், மாணவர்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் மனநிலையில் மாற்றம், மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள், மாணவர்களின் தற்கொலை என பல்வேறு பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இந்த … Read more

கருத்தடை செய்த 4 பெண்கள் மரணம்| Dinamalar

ஹைதராபாத் : தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்ராஹிம்புரம் அரசு மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி, பெண்களுக்கான கருத்தடை முகாம் நடந்தது. இதில், 34 பெண்கள் சிகிச்சை செய்து கொண்டனர். அவர்களில் நான்கு பெண்கள்உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.இதையடுத்து, அவர்களின் உறவினர்கள் தவறான சிகிச்சையால் மரணம் ஏற்பட்டதாக கூறி போராட்டம் நடத்தினர். இது குறித்து விசாரித்து ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில … Read more