என்னங்க பயமா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும் – விஜய் படத்தை காப்பியடித்த அடுத்த சீரியல்!

சென்னை : சீரியல்கள் மூலம் அனைத்து சேனல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தப் போட்டியில் பெரிய சேனல்கள், வளர்ந்து வரும் சேனல்கள் என அனைத்தும் போட்டியில் உள்ளன. மேலும் இந்தத் தொடர்களில் ரசிகர்களை கவரும்வகையில் வித்தியாசமான கதைக்களங்களை புகுத்த அனைத்து தொடர்களும் தொடர்ந்து முயன்று வருகின்றன. வரவேற்பை பெறும் சீரியல்கள் ஒவ்வொரு சேனலிலும் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை சீரியல்களும் பெற்று வருகின்றன. சேனல்களும் போட்டிப் போட்டு கொண்டு வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. இதன்மூலம் அந்தந்த … Read more

சீனா: 3வது முறையாக அதிபராக ஜி ஜின்பிங்.. ஆக்.16 கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு..!

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது கட்சி மாநாட்டை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் என அரச ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாபெரும் கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் பல தசாப்தங்களில் காணாத நாட்டின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் ஜி ஜின்பிங் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தும் நிலையில், இந்த நிலை மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா-வின் பெல்ட் & ரோடு … Read more

பெங்களூரு இத்கா வக்ஃப் மைதான சட்டப் போராட்டம்

பெங்களூரு இத்காவில் விநாயகர் உற்சவத்தை நடத்த அனுமதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடருமாறு கர்நாடக அரசுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.) உத்தரவிட்டது.இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முந்தைய நாள் ஒரு தீர்ப்பை வழங்கிய பிறகு, இந்திய தலைமை நீதிபதி யு யு லலித் புதிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்தார், அது வழக்கை மீண்டும் விசாரித்தது. வழக்கு என்ன? பெங்களூரு சாமராஜ்பேட்டை இத்காவில் 2 ஏக்கர் 12.5 சென்ட் (5 குண்டாஸ்) நிலத்தை … Read more

விநாயகர் சதுர்த்தி: ‘மிகப்பழையர், மிகப்பெரியர், மிகப்புனிதர்’-மயிலாடுதுறை மும்முக விநாயகர் தரிசனம்!

பொதுவாக இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளின் இருப்பிடமாகப் போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவற்றைக் குறிக்கும் வகையில் மும்முக விநாயகராக இப்பெருமானைப் போற்றுதல் வழக்கமாக உள்ளது. அதிலும் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (31.8.2022) மும்முக விநாயகரை தரிசித்தல் மிகவும் சிறப்பானதாகும் முக்காலத்திலும் காத்தருள்வார் மும்முக விநாயகர்..! அத்தகைய மும்முக விநாயகர் சந்நிதி மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் பழைமை வாய்ந்த ஸ்ரீசோமநாதர் ஆலயத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மூன்று கணபதிகளையும் ஒரே சந்நிதியில் தரிசிக்கலாம். … Read more

ஆஃப் பாயிலில் பெப்பர் அதிகமாக இருப்பதாக கூறி ஓட்டல் சமையல் மாஸ்டர் மீது தாக்குதல்!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி நான்கு ரோடு தம்மம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் குமரேசன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இதனிடையே நேற்று இவரது கடைக்கு கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் வந்து கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ஆப்-பாயில் ஒழுங்காக போட வில்லை பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் குமரேசன் கேட்டபோது அவரையும் கடையில் இருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர் . பின்னர் கடையில் இருந்த மாவு , … Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: உயர் நீதிமன்றம் அதிரடி கட்டுப்பாடுகள்

மதுரை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டிய விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டுகளையும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘புழுதிப்பட்டி சத்திரம் பீரான்பட்டி ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபானி திருக்கோயில் அருகே விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று … Read more

மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? – எல்.முருகன் கேள்வி

பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு முதலமைச்சர் பாகுபாடின்றி வாழ்த்து சொல்ல வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார். சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல விநாயகக் கடவுள், அனைவருக்கும் நல் ஆயுள், ஆசியைத் … Read more

கள்ளநோட்டுகள் அதிகரிப்பு! 2021ல் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் 60% 2000 தாள்கள்!

NCRB Data: கடந்த 2021 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல், சுமார் 60 சதவீதம் ரூபாய் 2,000 மதிப்புடையவை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது. அதாவது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ரூ.20.39 கோடி மதிப்புள்ள 3,10,080 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.12.18 கோடி மதிப்புள்ள 60,915 நோட்டுகள் ரூ.2,000 மதிப்பிலானவை என்று … Read more

கிலோ 1,800 ரூபாய்! கடும் விலையேற்றம் கண்ட மதுரை மல்லிகை

Madurai Malligai Price: விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் மதுரை மல்லிகை ஒரு கிலோ ரூபாய் 1,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் தேனியிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. தனிச்சிறப்பு மிக்க மதுரை மல்லிகை நாள்தோறும் சராசரியாக … Read more

இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 ராக்கெட்… சனிக்கிழமை நாசா மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல்

இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை சனிக்கிழமை நாசா மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக நேற்று முன்தினம் நிலவுக்கு ராக்கெட் அனுப்ப இருந்த நிலையில் கடைசி நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சனிக்கிழமை ஆர்டெமிஸ் 1 ராக்கெட் … Read more