உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் பூஜைகளை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி!

உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் பூஜைகளை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அங்கு சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பெங்களூரு சாம்ராஜ் நகரில் உள்ள ஈத்கா மைதானம் யாருக்கும் சொந்தம் என வக்பு வாரியத்துக்கும், மாநில வருவாய்த் துறைக்கும் இடையே எழுந்த பிரச்சனையால், அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெங்களூருவைப் போல உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கக்கோரிய வழக்கை நள்ளிரவில் விசாரித்த … Read more

திண்டுக்கல்லில் தயாராகி அமெரிக்காவில் ஒலிக்கும் பறை இசை தோல் இசைக்கருவிகள் தயாரிக்க தோள் கொடுக்குமா அரசு

திண்டுக்கல்  : திண்டுக்கல் பகுதியை சுற்றியுள்ள தோல் இசைக்கருவிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இசைக்கருவிகளை கூடுதலாக தயாரிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் கலந்த ஒரு விஷயம் இசை. அதிலும் தமிழரின் தொன்மையான தோல்இசைக்கருவிகளில் இருந்து வரும் இசை உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்.  திருவிழாக்களில் , சுபநிகழ்ச்சிகளில் ஒலித்த இந்த இசைக்கருவிகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அதே போல இந்த இசைக்கருவிகள் சாதிய சாயமும் பூசப்பட்டதால், இசையை … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசியிலும், நாளை நீலகிரி, கோவையிலும் மிக கனமழை பெய்யலாம். விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மதம் மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு சலுகை குறித்து ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: இந்து, புத்தம் மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த தலித்களுக்கு வழங்கப்படும் எஸ்சி இட ஒதுக்கீட்டு சலுகைகளை பிற மதங்களுக்கு மாறிய தலித்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரும் பொதுநலன் மனு மற்றும் கிறிஸ்துவ தலித்களுக்கும் எஸ்சி இட ஒதுக்கீட்டு சலுகைகளை வழங்க கோரும் மனு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்பாக … Read more

தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின்; விபத்து குறித்து மதுரை கோட்ட ரயில்வே விளக்கம்

மதுரை ரயில் நிலையம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின் தடம் புரண்ட விபத்து குறித்து மதுரைக்கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நாள்தோறும் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை வழக்கம்போல 4.15மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக மதுரை கோட்ஸ் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ்சின் இன்ஜினை மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக இன்ஜினை நகர்த்தி … Read more

அஸ்ஸாம்:அல்கொய்தாவுக்கு ஆட் சேர்ப்பு- மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடிப்பு

India oi-Mathivanan Maran குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அல்கொய்தா கிளை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் உ.பி, அஸ்ஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக செயல்படுவோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது. பாஜக அரசுகளின் இந்த புல்டோசர் கலாசாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என … Read more

பஞ்சாபில் தேவாலயம் மீது தாக்குதல்: காருக்கு தீவைப்பு| Dinamalar

அமிர்தசரஸ்: சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் மோசடி செய்து மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, பஞ்சாபின் டர்ன்டாரன் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், பாதிரியார் காரும் தீவைத்து எரிக்கப்பட்டது. அகல் தக்த் ஜதேதர் என்ற சீக்கிய அமைப்பின் தலைவர் ஹர்பரீத் சிங் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவ மிஷனரிகள், சீக்கியர்களிடம் மோசடி செய்து மதமாற்றம் செய்து வருகின்றன. சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசின் ஆதரவுடன் இது செயல்படுகிறது. ஓட்டு வங்கி … Read more

அயர்லாந்தில் தண்ணீரில் மூழ்கி கேரள சிறுவர்கள் பலி| Dinamalar

லண்டன்: அயர்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள எனாக் லக் என்ற இடத்தில் அமைந்துள்ள ஏரியில் குளிப்பதற்கு நண்பர்கள் 6 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஆழம் நிறைந்த பகுதிக்கு சென்று தண்ணீருக்குள் சிக்கினர். அங்கிருந்து வெளியேற முடியாததால் கூச்சல் போட்டுள்ளனர். இதனை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 3 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டனர். ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இரண்டு பேர் … Read more

வெளியானது சந்தானத்தின் ‘கிக்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: கன்னட டாப் இயக்குநருடன் மஜா கூட்டணி

சென்னை: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் நடித்திருந்த ‘குலுகுலு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. சந்தானத்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ஹீரோவான சந்தானம் விஜய் டிவியில் இருந்து கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த சந்தானம், முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வந்தார். நக்கல் மன்னன் கவுண்டமணியின் ஜூனியர் வெர்ஷனாக கொண்டாடப்பட்ட சந்தானம், திடீரென ஹீரோவாக மட்டுமே … Read more

டாடா குழுமத்தில் பெரும் மாற்றம்.. சந்திரசேகரன் நிலை என்ன..?

டாடா சன்ஸ் தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) செவ்வாயன்று அனைத்து தீர்மானங்களையும் ஒருமனதாக நிறைவேற்றியது. இந்தப் புதிய முடிவுகள் மூலம் சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தில் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும், டாடா டிராஸ்ட் நிர்வாகத்திற்குள் நுழைய முடியாத வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் டாடா குழுமத்தின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் மட்டுமே என்றும், டாடா டிராஸ்ட்-க்கு தான் மொத்த பங்குதாரர்கள் அதிகாரம், பங்குகள் அதிகாரம் கிடைக்கும் என … Read more