Cobra Twitter Review: சியான் விக்ரமின் ஒன் மேன் ஷோ.. அஜய்ஞானமுத்து தரம் யா!

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து, விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். இதில், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான … Read more

சற்றுமுன் | தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த நல்ல மழை காரணமாக, அணை நிரம்பி வழிகிறது. இந்த நிலையில், வைகை அணை இன்று திறக்கப்பட உள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள … Read more

ஜூ.வி செய்தி எதிரொலி: பள்ளி, காவல் நிலையம் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடல்!

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் இயங்கக்கூடாது என சில கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் அமலில் வருகின்றன. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நகரமாக திகழும் திண்டிவனத்தில்… அரசு உதவிப்பெறும் பள்ளிக்கு 150 மீட்டருக்குள்ளாகவே டாஸ்மாக் கடை இயங்கி வருவது பற்றியும், பரபரபான பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையத்துக்கு எதிரிலேயே இயங்கும் டாஸ்மார்க் கடையால் மூச்சுமுட்ட குடித்துவிட்டு காவல் நிலைய வாசலிலேயே மதுப்பிரியர்கள் விழுந்து கிடப்பது பற்றியும் சுருக்கமாக, 13.07.2022 தேதியிட்ட … Read more

“அன்று ரூ.3,000 ஆக உயர்த்த கோரினாரே ஸ்டாலின்” – நெல் கொள்முதல் விலையில் அன்புமணி அதிருப்தி

சென்னை: “ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்பது தான் தமிழக உழவர்களின் கோரிக்கை ஆகும். நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலை நியாயமும் இல்லை; போதுமானதும் அல்ல” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாட்டில் 2022-23ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 75 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 100 ரூபாயும் … Read more

‘உ.பி.யில் மதக் கலவரங்கள் இல்லை’ – 2021 தேசிய குற்ற ஆவண காப்பக தகவலால் யோகி மகிழ்ச்சி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மதக் கலவரங்கள் இல்லை என்ற தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2021-ம் ஆண்டிற்கான அறிக்கையின் குறிப்பால், அங்கு “ராமராஜ்ஜியம்” அமைவதாக சமூக வலைதளங்களில் பாஜகவினரும், பாஜக ஆதரவாளர்களும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றனர். வட இந்தியாவில் அதிகமான மதக் கலவரங்கள் நடைபெறும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் கருதப்படுகிறது. இதற்கு அம்மாநிலப் பகுதியின் வரலாற்றுச் சம்பவங்கள் காரணங்களாக உள்ளன. இதை சாதகமாக்கி அம்மாநிலத்தில் மதக் கலவரத்தின் அடிப்படையில் அரசியலும் நடப்பது உண்டு. பலசமயம் அரசியல் லாபத்திற்காகவே … Read more

தமிழகம் முழுவதும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி: நாளை தொடக்கம்!

தமிழக மாவட்டங்களில் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி அனைத்து மாவட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை, எழிலகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக தமிழக மாவட்டங்களில் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் எஸ். கே. பிரபாகர், முதன்மைச் செயலாளர் … Read more

ரத்தம் சிந்தாமல் முடிந்த பனிப்போர்: யார் இந்த மிக்கைல் கொர்பச்சேவ்!

பனிப்போரை இரத்தம் சிந்தாமல் முடிவுக்குக் கொண்டு வர உதவிய சோவியத் யூனியனின் 8ஆவது மற்றும் கடைசி அதிபர் மிக்கைல் கொர்பச்சேவ் உடல்நலக் குறைவு காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனின் அதிபராக 1985 முதல் 1991ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் மிக்கைல் கொர்பச்சேவ். அதேகாலகட்டத்தில் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவியில் இருந்தார். கொர்பச்சேவ் மரணம் குறித்து … Read more

இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுனர்.. ஆட்டோவிலிருந்து குதித்த பெண்

Sexual Harassment: ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவையில் கடந்த பத்து மாதங்களாக தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் சென்ற இளம் பெண் கோவை திரும்ப இரவு தாமதம் ஆகியிருக்கிறது. நள்ளிரவு 12:30 மணியளவில் பேருந்து மூலம் கோவையை அடைந்த இளம் பெண் – பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் இறங்கி ரேபிடோ செயலி மூலம் ஆட்டோ ஒன்று புக் செய்துள்ளார். ஆட்டோ வந்தவுடன் ஆட்டோவில் … Read more

வைகை அணையில் இருந்து நீர் திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

தேனி: வைகை அணையில் இருந்து நீர் திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4006 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வைகை அணையின் … Read more

2006, 2007ம் ஆண்டுகளில் அரசுத்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: 2006, 2007ம் ஆண்டுகளில் அரசுத்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர் என்ற தகவலை தர தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு கோரி வேளாண்துறை தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டது என்ற விவரத்தை தர உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.