வெள்ளத்தில் மிதக்கும் கொச்சி, பெங்களூர் கேரளா, கர்நாடகாவில் கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெங்களூர், கொச்சி நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.கேரளாவில் கடந்த சில தினங்களாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 9 அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்த அடைமழையால் கொச்சி நகரமே வெள்ளத்தில் … Read more

\"எங்களையே ஃபெயில் ஆக்குவியா\" – ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து வெளுத்த மாணவர்கள்.. கொடுமை

India oi-Jackson Singh டும்கா: தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், தங்களை ஃபெயில் ஆக்கிய ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும் போது இன்றைக்கு இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மிகுந்த கவலை அளிப்பதாகவே உள்ளன. தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்த காலம் மலையேறி, தற்போது ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் போதாத காலம் வந்திருக்கிறது. பெற்றோர்களின் அளவுக்கு … Read more

பூஸ்டர் டோஸ் செலுத்தியோர் எண்ணிக்கை மிக குறைவு

புதுடில்லி : ‘பூஸ்டர் டோஸ்’ எனப்படும், முன் எச்சரிக்கை டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டன. இந்நிலையில் நோயின் தாக்கத்தை குறைக்கும் வகையில், இரண்ட டோஸ் செலுத்தியவர்களுக்கு, கூடுதலாக பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி, முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.இரண்டாம் கட்டமாக, 18 – 59 வயது வரையுள்ள, 77 … Read more

யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. சன் டிவி வெளியிட்ட மாஸ் வீடியோ.. குவியும் வாழ்த்து!

சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக தன்னை நிரூபித்துள்ளார். தன்னுடைய 14வது வயதில் தன்னுடைய இசைப்பயணத்தை அரவிந்தன் படத்தின்மூலம் துவக்கிய இவர் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தன்னுடைய இசைப்பயணத்தில் 25 ஆண்டுகளை கழித்துள்ள யுவன், இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தன்னுடைய 14வது வயதில் சரத்குமாரின் அரவிந்தன் படத்தில் … Read more

ஐடி ஊழியர்களே எச்சரிக்கை.. 2வது வேலை குறித்து நிறுவனங்களின் கண்டிசனை தெரிஞ்சுகோங்க!

ஐடி துறையில் சமீபத்திய தினங்களாகவே மூன்லைட்டிங் குறித்த விவாதம் இருந்து வருகின்றது. ஒரு தரப்பு இது காலத்தின் தேவை என்றாலும், மற்றொரு தரப்பு இது நிறுவனத்திற்கு எதிரானது என கூறுகின்றது. இது குறித்து இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், முக்கிய தரப்புகள் சொல்வதை சமீபத்திய நாட்களாகவே பார்த்து வருகிறோம். எனினும் முன்னணி ஐடி நிறுவனங்கள் பலவும் அதனதன் அப்பாயின்மெண்ட் ஆர்டரில், இது குறித்து என்ன கூறியிருக்கின்றன என்பதை யாரேனும் கவனித்தது உண்டா? ஐடி பங்குகள் … Read more

ஜெயா மரண வழக்கு: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை மீது சட்ட ஆலோசனை பெற தமிழக அமைச்சரவை முடிவு

ஜெயலலிதா மரணத்தில் நிலவும் மர்மம் விலகாத நிலையில், வி.கே.சசிகலா உள்ளிட்ட 3 பேரின் பங்கு குறித்து அரசு விசாரணைக்கு பரிந்துரைக்கும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை மீது சட்ட ஆலோசனை பெற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. முன்னாள் முதல்வரின் மரணம் தொடர்பான சூழ்நிலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கணிசமான அதிகாரத்தையும், செல்வாக்கையும் கொண்டிருந்த அவரது நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்த 4 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ள நிலையில், … Read more

தொடர் இன்ஜின் கோளாறு; சினூக் ரக ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை நிறுத்தியதா அமெரிக்கா?

அமெரிக்கா 1960-ம் ஆண்டிலிருந்து போர்க்களத்தில் பயன்படுத்திவரும் சினூக் ஹெலிகாப்டர்களை முழுமையாக தரையிறக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்ஜினில் அடிக்கடி கோளாறு காரணமாக தீப்பிடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கர் தனது சினூக் ரக ஹெலிகாப்டர்களை தரையிறக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் மொத்தம் 400 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. அதே சமயம் இந்தியாவிடம் 15 CH-47 சினூக் ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. இந்தியாவில் சினூக் ஹெலிகாப்டர்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. சினூக் ஹெலிகாப்டர் லடாக், சியாச்சின் பனிப்பாறை போன்ற இடங்களில், விமானப் போக்குவரத்து … Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் விழா ஏற்பாட்டாளர்களே பொறுப்பு – உயர்நீதிமன்றம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், ஊர்வலத்தில் ஆபாச நடனமோ பேச்சோ இருக்கக் கூடாது என்றும் அரசியல் கட்சி, மதம், சமூகம் சார்ந்த நடனம், பாடல்கள் இசைக்கக் கூடாது என்றும் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் நிகழ்ச்சி இருக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார். ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் விழா … Read more

இந்து மதத்துக்கு எதிரான திராவிடர் கழக மாநாட்டை தடை செய்ய வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “திருவாரூரில் செப்டம்பர் 4-ம் தேதியன்று நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திருவாரூரில் செப்டம்பர் 4-ம் தேதியனறு சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தப்போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. சனாதனம் என்பது இந்து மதத்தையே குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதாவது இந்து மதத்தையும், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து கடவுள்களையும் இழித்தும், பழித்தும், பேசுவதற்காகவே இந்த … Read more

ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் ஜேஎம்எம், காங். எம்எல்ஏக்கள் சத்தீஸ்கரில் முகாம்

ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் முதல்வரின் பெயரில் குவாரி ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தலைமை தேர்தல் ஆணையம், கடந்த 25-ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பெய்ஸுக்கு தனது பரிந்துரையை … Read more