போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபடும் பழக்கம் உள்ளவர்களுக்கு தடுப்புக் காவல் – பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை அம்மாநில சட்டப்பேரவையில், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடும் பழக்கமாகக் கொண்டவர்களை போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களில் சட்டவிரோத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி கேரளாவில் போதைப்பொருள் குற்றவாளிகள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று கூறினார். “இந்தச் சட்டத்தின்படி, போதைப்பொருள் குற்றத்தில் வழக்கமக ஈடுபடுபவர்களை ஜாமீன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்க வழிவகை உள்ளது. இதுவரை, இந்த விதியை நாம் பயன்படுத்தவில்லை. இப்போது, ​​இது தொடர்பாக தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. … Read more

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு: பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுமையாக நீர் மின் நிலையங்கள் வழியாகவும், உபரி நீர் போக்கி … Read more

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை மீட்ட வனத்துறையினர்..!

உதகை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டியானையை மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்க்க வனப்பகுதியில் விட்ட நிலையில், அந்த குட்டி யானை மீண்டும் வனத்துறையினரிடமே திரும்பி வந்தது. நேற்று முன்தினம் மாவனள்ளா பகுதியில் உள்ள காரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், சடாப்பட்டி வனப்பகுதியில் விட்டனர். அன்றிரவு தாய் யானை, குட்டியை அழைத்து செல்ல வரும் என அவர்கள் எதிர்பார்த்த நிலையில், தாய் யானை வரவில்லை. இரு நாட்களாக மசினகுடி, சிங்காரா … Read more

ஸ்டாலின் செப்.2-ல் கேரளா பயணம்: முல்லை பெரியாறு குறித்து பினராயி விஜயனுடன் பேச்சு

சென்னை: மத்திய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, 2-ம் தேதி கேரளா செல்லும் அவர்,கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு உள்ளிட்ட திட்டங்கள் குறித்துபேசுகிறார். மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்கும் வகையில் மத்திய உள்துறை … Read more

ஆசிய கிண்ணம்… சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி

15வது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிராக 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். பவர்பிளேவில் இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 13 பந்துகளில் … Read more

ஈரோட்டில் 1 ரூபாய்க்கு 3 வேளை உணவு வழங்கும் தம்பதிக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: ஈரோட்டில் 1 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கும் தம்பதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பவர்ஹவுஸ் சாலையில் உள்ள, ‘ஏஎம்வி ஹோம்லி மெஸ்’ முன்பாக காலை, மதியம், மாலை என 3 நேரங்களிலும் வாடிய முகத்துடன் வரும் நோயாளிகளின் உறவினர்கள், மலர்ந்த முகத்துடன் மருத்துவமனைக்குத திரும்புகின்றனர். ஒருவேளை உணவுக்கு ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படும் தரமான உணவு தான் இந்த மலர்ச்சிக்கு காரணம் … Read more

தயாரிப்பாளர் ஆனார் ரம்யா

பெங்களூரு: தமிழில் பல படங்களில் நடித்துள்ள ரம்யா இங்கு ‘குத்து ரம்யா’ என்று அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் ‘திவ்யா ஸ்பந்தனா’ என்ற பெயரில் நடித்தார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பி ஆனார். அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். கடைசியாக கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘நாகராஹவு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் திரைத்துறைக்கு வருகிறார். இம்முறை அவர் தயாரிப்பாளராக வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது … Read more

இந்தியன்-2 வில் இணைந்த நந்து பொதுவால்

கமல் – ஷங்கர் கூட்டணியில் கடந்த 27 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவக்கப்பட்டாலும் சில பிரச்சனைகள் காரணமாக இடையில் தேக்கம் ஏற்பட்டு, தற்போது மீண்டும் முழுவீச்சுடன் துவங்கப்பட்டுள்ளது. கதாநாயகிகளாக காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் புதிதாக விவேக் … Read more

சோவியத் யூனியனின் கடைசி தலைவர் கார்பசேவ் மரணம்| Dinamalar

மாஸ்கோ: முன்னாள் சோவியத் யூனியனின் கடைசி தலைவராக ஏழு ஆண்டுகள் இருந்த மைக்கேல் கார்பசேவ், 91, வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பாதிப்பால் உயிரிழந்தார். சோவியத் யூனியனின் கடைசி தலைவராக, 1985 மார்ச்சில் பதவியேற்றார், மைக்கேல் கார்பசேவ். அப்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்தது, ஆட்சியில் கட்சியின் தலையீட்டை குறைத்தது என, பல சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். இதோடு உலக நாடுகளுடனான பனிப்போரையும் முடிவுக்கு கொண்டு வந்தார். கடும் விமர்சனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர் வகுத்த … Read more

24 படத்தின் மேக்கிங் வீடியோ.. ரயிலிலிருந்து குதிக்கும் சூர்யா.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா பல படங்களில் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். Recommended Video 24 படத்தின் மேக்கிங் வீடியோ.. ரயிலிலிருந்து குதிக்கும் சூர்யா.. என்ன சொன்னார் தெரியுமா? சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் அவரது ரோலக்ஸ் கேரக்டர் மிரட்டலாக அமைந்தது. கேங்ஸ்டர் கேரக்டரில் கலக்கியிருந்தார். முன்னதாக அவர் வில்லனாக நடித்திருந்த 24 படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் 24 படம் … Read more