அரசியல், ஜாதி குறித்த பாடல், நடனங்கள் கூடாது விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு கட்டுப்பாடுகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எந்தவொரு அரசியல்கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது ஜாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக்கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச  நடனமோ அல்லது அநாகரீகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல  நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை வைத்து  வழிபடவும், வைக்கப்பட்டுள்ள சிலைகளை ஊர்வலமாக எடுத்து நீர்நிலைகளில் கரைப்பது மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆடல்-பாடல்  … Read more

3 நாட்கள்.. 240 கி.மீ.. எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்து காருக்குள்ளே டேரா போட்ட ராஜநாகம்!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவரது காருக்குள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து சென்றதாக நம்பப்படுகிறது. அவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனைச் சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தபோது காருக்குள் பாம்பு ஏறியதைக் கண்டதாக சுஜித் தெரிவித்தார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. பாம்பை வெளியே எடுக்க வனத்துறை அதிகாரிகளை அழைத்தார். அது என்ஜின் பேக்குள் நுழைந்து மற்றும் கார் … Read more

இந்திய சுதந்திர போராட்டத்தில் சாவர்க்கரின் பங்களிப்பு என்ன?| Dinamalar

இந்தியாவில் சாவர்க்கர் அளவுக்கு விமர்சிக்கப்பட்ட, சுதந்திர போராட்ட தலைவர் யாரும் இருக்க முடியாது.எட்டாம் வகுப்பு, கன்னட பாடப் புத்தகத்தில், ‘சாவர்க்கர் அடைக்கப்பட்ட அந்தமான் சிறையில், ஒரு சிறிய சாவி துவாரம் கூட இல்லை. ஆனாலும், எங்கிருந்தோ வரும் புல்புல் பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து சென்று, தாய்நாட்டை காண்பார்’ என கூறப்பட்டுள்ளது. கேலி, கிண்டல் இதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., வினர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.’சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை விவரிக்க, கவிதை நயத்துடன் எழுதப்பட்ட வரிகள் … Read more

48 வருட திரையுலக பயணத்தை கொண்டாடிய பாலகிருஷ்ணா

தெலுங்கு சினிமாவில் கடந்த நாற்பது வருடங்கலுக்கு மேலாக கதாநாயகனாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இதுவரை கதாநாயகனாகவே 106 படங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இப்போதும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் ஆக்சன் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இதற்கு முன்னதாக பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான அகாண்டா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பிரபல இயக்குனர் கோபிசந்த் மாலினேனி டைரக்ஷனில் தனது 107-வது படத்தில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த படத்தில் கதாநாயகியாக … Read more

மங்காத்தா 11 வருட கொண்டாட்டம்.. அன்சீன் போட்டோவை வெளியிட்ட வெங்கட்பிரபு!

சென்னை : வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த மங்காத்தா திரைப்படம் வெளியாகி 11 ஆண்டு முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் வெங்கட்பிரபு அன்சீன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 2011 ஆகஸ்ட் 31 அன்று வெளியான திரைப்டம் மங்காத்தா அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல், வெகுஜன சினிமா ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தியது இந்த படம். இந்த படத்தில் ஜெயப்பிரகாஷ். வைபவ், பிரேம்ஜி, அஞ்சலி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு என ஏராளமானோர் நடித்திருந்தனர். … Read more

257 கி.மீ., வேக சூறாவளிஜப்பானில் பாதுகாப்பு தீவிரம்| Dinamalar

ஒகினாவா:ஜப்பானில் ‘ஹின்னம்னார்’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி மணிக்கு, 257 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கன மழை, புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கிழக்கு சீன கடலில் உருவாகியுள்ள இந்த சூறாவளி, ஜப்பான் தீவுகளை கடுமையாக தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவாக இருக்கும். கடலில் 50 … Read more

ஐ.சி.சி. கிரிக்கெட்: ஒளிபரப்பு உரிமத்தை பகிரும் ஜீ – டிஸ்னி ஸ்டார் நிறுவங்கள்

Disney Star shares part of ICC media rights with Zee Tamil News: 2024-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு இறுதிவரை நடைபெறும் அனைத்து வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஏறக்குறைய ரூ.24 கோடி ஆயிரம் வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நிதி சுமையை கருத்தில் கொண்டு இவற்றின் ஒளிபரப்பு உரிமத்தை … Read more

நொண்டி அடிங்க பாக்கலாம்.. படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய காவல்துறையினர்..!

பட்டிகட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு வித்யாசமான தண்டனை வழங்கிய காவல்துறையினர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி கல்லூரி நேரங்களில்  மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்ல பேருந்தை பயன்படுத்துவர். அதே நேரத்தில் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால்  படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரத்தில் மட்டும் இரண்டு பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டு பயணத்தால் தவறி விழுந்துள்ளனர். அதில் , ஒரு மாணவன் பரிதாபமாக பலியானார். தமிழகத்தின் பல இடங்களிலும் பள்ளிகல்லூரி மாணவர்கள் படிக்கடியில் … Read more

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளுக்குள் உள்புகுந்த வெள்ள நீர்!

மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் 67 வீடுகளில் வெள்ள நீர் உள்புகுந்தது.  காவேரி கரையோர பகுதிகளான இந்திரா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் திருமண … Read more

ரிஷிவந்தியம் | நில அபகரிப்பு புகாரளித்த பெண்ணிடம் திமுக கவுன்சிலர் அத்துமீறியதாக குற்றச்சாட்டு

ரிஷிவந்தியம்: நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாக ரிஷிவந்தியம் திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், இவரது சொந்த ஊரான சுத்தமலை கிராமத்தில் உள்ள வீட்டில் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் அவரின் தம்பி மனைவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய … Read more