சீன ட்ரோனை சுட்டு வீழ்த்தியது தைவான் ராணுவம்.
பொதுமக்கள் சாகசமாக இருக்கலாம் என தைவான் ஆய்வாளர் யென்-சி ஹ்சு தகவல்
கின்மென் தீவிற்கு மேல் பறந்த அடையாளம் தெரியாத சிவிலியன் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தைவான் இராணுவம் தெரிவித்துள்ளது.
தைவானை தனது சொந்த பிரதேசமாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்தவகையில் தைவானையும், சீனாவையும் சமாதானம் அல்லது இராணுவ பலத்தால் ஒன்றிணைக்க சீனா திட்டமிட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணம், தீவைச் சுற்றி சீனாவின் இராணுவ நடவடிக்கை அதிகரிக்க செய்துள்ளது.
Reuters
அதிலும் சீனாவின் கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கின்மென் மற்றும் கிழக்கு சீனக் கடலில் உள்ள மாட்சு தீவுகளைச் சுற்றி ட்ரோன் விமானங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வியாழன்கிழமை கின்மென் தீவிற்கு மேல் பறந்த அடையாளம் தெரியாத சிவிலியன் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தைவான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்களுக்கு எதிராக நேரடி வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும் என்ற எச்சரிக்கை தொடர்ந்து முதல் தாக்குதலாக சிவிலியன் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
AP
இதுத் தொடர்பாக தைவான் கவுன்சில் ஆன் ஸ்ட்ராடஜிக் அண்ட் வார்கேமிங் ஸ்டடீஸில் உதவி ஆய்வாளர் யென்-சி ஹ்சு (Yen-Chi Hsu) சுடப்பட்ட ட்ரோன் விமானம் பொதுமக்கள் சாகசமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊடகங்களின்படி தைவான் ராணுவம் சீனாவிற்கு எதிராக சிவிலியன் விமானங்கள், வானிலை பலூன்கள், பொழுதுபோக்கு மீன்பிடி படகுகள் மற்றும் கடல் ஆராய்ச்சி கப்பல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவருக்கு ஜனாதிபதி புடின் மலர் அஞ்சலி…வீடியோ காட்சிகள்
இத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலும் ஆய்வாளர்களால் சாம்பல் மண்டல தந்திரோபாயங்கள் என்று விவரிக்கப்படுகின்றன.