அபுதாபி: ”ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டப்பட்டு வரும் ஹிந்து கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழ்ந்துள்ளார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், அங்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அந்த கோவில் கட்டுமானத்தை பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இந்த கோவிலைக் கட்டுவதில் அனைத்து இந்தியர்களின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள். இந்த கோவில் 55 ஆயிரம் ச.மீ., நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. மத்திய கிழக்கு நாட்டில் அமையும் முதல் பாரம்பரிய ஹிந்து கோவில் இதுவாகும். இந்த கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருக்கும் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement