புதுடில்லி: கடந்த ஆக., மாதம், 1.43 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஆக வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஆக.,மாத வசூலை விட 28 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆக., மாதம் ஜிஎஸ்டி ஆக ரூ.1,43,612 கோடி வசூலாகி உள்ளது.
அதில்,
சிஜிஎஸ்டி – ரூ. 24,710 கோடி
எஸ்ஜிஎஸ்டி – ரூ.30,951
ஐஜிஎஸ்டி – ரூ.77,782 கோடி( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,067 கோடி உட்பட)
செஸ் – ரூ.10,168 கோடி( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,018 கோடி உட்பட) அடங்கும்.பொருளாதாரம் மீண்டு வருவதால், அதன் நேர்மறையான தாக்கம் ஜிஎஸ்டி வசூலில் பிரதிபலிக்கிறது. தொடர்ந்து 6 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆக., வசூலாகி உள்ள 1.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஆனது, கடந்த 2021ம் ஆண்டு ஆக., மாதம் வசூலான ரூ.1,12,020 கோடி ஜிஎஸ்டியை விட 28 சதவீதம் அதிகமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement