கொரோனாவின் வருக்கைக்கு பிறகு ஆங்காங்கே புற்றீசல் போல பேக்கரிகள், காபி பார்கள் என புதிய புதிய கடைகள் ஏராளமாக தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த துறையிலும் ஒரு புதுமையை காட்டலாம், வணிகத்தினை இப்படியும் கூட மேம்படுத்தலாம் என சாதித்து காட்டியுள்ளனர் 3 நண்பர்கள்.
அதன் மூலம் மாபெரும் அளவில் வளர்ச்சியினையும் கண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. வெறும் 2 லட்சம் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேக்கிங்கோ (Bakingo), இன்று பிரம்மாண்ட வளர்ச்சியினை கண்டுள்ளது.
2 உலகப்போர்களை கண்ட #சென்னை பேக்கரி… 137 ஆண்டுகளாக ஒரே தரம்!
ஆன்லைன் பேக்கரி
கடந்த 2016ல் தொடங்கப்பட்ட பேக்கிங்கோ, அப்போது ஒரு ஆன்லைன் பேக்கரியாக தொடங்கப்பட்டது. இது கிளவுட் கிச்சன் மாடலில் செயல்பட்டு வருகின்றது. இன்று 11-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. கோடிகளில் வருமானமும் ஈட்டி வருகின்றது.
3 நண்பர்கள் ராக் பெர்பார்மன்ஸ்
டெல்லியின் நேதாஜி சுபாஷ் பல்கலைக் கழகத்தினை சேர்ந்த மூன்று கல்லூரி நண்பர்களான, ஹிமான்ஷூ சாவ்லா, ஷ்ரே சேகல் மற்றும் சுமன் பத்ரா உள்ளிட்ட மூன்றுபேரும் தங்களது தொழிலை கூட்டாக தொடங்கியுள்ளனர். இன்று கோடி கணக்கில் வருமானம் ஈட்டும் தொழிலதிபர்களாக உருவெடுத்துள்ளனர்.
ஆரம்பம் இப்படித் தான்
2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, நண்பர்கள் மூவரும் கார்ப்பரேட் வேலைகளில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். அதன் பிறகு 2010ல் தொடங்கப்பட்ட ப்ளவர் ஆரா மற்றும் கேக் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வெறும் 2 லட்சம் மூலதனமாக செய்துள்ள இந்த நண்பர்கள், ஆரம்பத்தில் ஒரிரு பணியாளர்களையே சேர்த்துக் கொண்டுள்ளனர்.
காதலர் தினமே திருப்பு முனை
2010ம் ஆண்டின் காதலர் தினம் எங்களுக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. ஆர்டர்கள் அதிவேகமாக உயர்ந்தன. அந்த சமயத்தில் டெலிவரிக்காக நாங்களே இறங்கி வேலை செய்தோம். அந்த சமயத்தில் இது தான் விரிவாக்கத்துக்கு சரியான நேரம் என்று தோறியது. அதன் பிறகு தான் 2016ல் பேக்கிங்கோ என்ற பெயரில் புதிய தனி பிராண்டாக தொடங்கினோம்.
ருசியான கேக்குகள்
இந்த பேக்கிங்கோ பிராண்டில் பிரெஷ்ஷான கேக்குகளை, ருசிகரமாக ஒரே மாதிரி சுவையில் அனைத்து இடங்களுக்கும் வழங்கத் தொடங்கினோம். இதிலேயே அதிக கவனமும் செலுத்த தொடங்கினோம். இதனை நாட்டின் பல பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த தொடங்கியுள்ளோம்.
நல்ல வரவேற்பு
சுவையான உணவுகளுக்கு என்றும் வரவேற்பு கிடைக்கும் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக எங்களது தொழிலுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் தான் ஹைத்ராபாத், பெங்களுரு மற்றும் டெல்லி என் சி ஆர் போன்ற நகரங்களிலும், இது தவிர சில இரண்டடுக்கு நகரங்களிலும் விரிவாக்கம் செய்யத் தொடங்கியுள்ளோம்.
விற்பனை எப்படி
தற்போது பேக்கிங்கோ விற்பனையில் 30% அதன் இணையம் மூலமாகவும், 70% ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ போன்ற மற்ற டெலிவரி தளம் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது ஆஃப்லைனிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம்.
ரூ.75 கோடி வணிகம்
2021 – 22ம் நிதியாண்டில் மட்டும் பேக்கிங்கோ 75 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது. இங்கு தற்போது 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது ஆன்லைனில் மட்டும் அல்ல, தற்போது ஆஃப்லைனிலும் தனது சேவையினை தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் முதல் ஆஃப்லைன் கடையினை தொடங்கினோம். இன்னும் படிப்படியாக விரிவாக்கத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது இந்த நண்பர்கள் கூட்டணி.
Online Bakery Business with 3 College Friends:Bakingo as great growth
Online Bakery Business with 3 College Friends:Bakingo as great growth/ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. !