வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோழிக்கோடு : கேரளாவில் விபத்தில் படுகாயம் அடைந்தவரை ஏற்றி வந்த ஆம்புலன்சின் கதவில் ஏற்பட்ட கோளாறால் திறக்க முடியவில்லை. அதனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
கோழிக்கோடு அருகே வசித்தவர் கோயா, 53. இவர், நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி வந்தனர். உடன், கோயாவின் நண்பரும் இருந்தார். கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்ததும், கோயாவுடன் இருந்த நண்பர், கதவை திறக்க முயன்றார்.

அப்போது பூட்டில் கோளாறு ஏற்பட்டு, ‘ஜாம்’ ஆனது. ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவமனை ஊழியர்கள் இணைந்து கதவை திறக்ககடுமையாக முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. அங்கு திரண்ட பொதுமக்கள், கோடாரியின் உதவியுடன் பூட்டை உடைத்து, ஆம்புலன்ஸ் கதவை திறந்தனர்.
அதற்குள், கோயா பரிதாபமாக இறந்தார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால், கோயா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement