ஆர்எஸ்எஸ் மோசமானதாக இருந்தது இல்லை.. மம்தா பானர்ஜி கருத்து.. விளாசும் ஓவைசி

கொல்கத்தா: ஆர்எஸ்எஸ் மோசமானதாக இருந்தது இல்லை என்றும் பாஜக கட்சியினை விரும்பாத மற்றும் ஆதரிக்காதவர்கள் அதிகம் பேர் உள்ளனர் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மம்தாவை விமர்சித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை மிகக்கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவர்.

பாஜகவுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வரும் மம்தா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அனைவரும் மோசமானவர்கள் கிடையாது

பாஜகவுடன் எதிரும் புதிருமான அரசியலில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி, தற்போது அதன் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டும் வகையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. தலைமைச்செயலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவர்களாக இருந்தது கிடையாது. பாஜக செய்யும் அரசியலை விரும்பாதவர்கள் பலரும் ஆர்.எஸ். எஸ் அமைப்பில் உள்ளனர்” என்றார்.

 சான்றிதழ்

சான்றிதழ்

மம்தா பானர்ஜியின் இந்த கருத்துதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மம்தா பானர்ஜியின் கருத்தை, காங்கிரஸ், சிபிஎம், மற்றும் ஏ.ஐ.எம்.ஐ. எம் ஆகிய கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. அதேவேளையில், மம்தா பானர்ஜியின் போன்றவர்களின் சான்றிதழ் அந்த அமைப்புக்கு தேவையில்லை என்று சாடியுள்ளது.

 துர்கை என்று அழைத்து இருக்கிறது

துர்கை என்று அழைத்து இருக்கிறது

ஆர்.எஸ். எஸ் குறித்த கருத்துக்காக மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய ஓவைசி, ”ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 2003-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசப்பற்று மிக்க இயக்கம் என்று மம்தா பானர்ஜி பாராட்டியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மம்தா பானர்ஜியை துர்கை என்று அழைத்து இருக்கிறது” என்று சாடினார்.

 யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை

யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை

இவ்விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி கட்சியின் எம்.பி சௌகதா ராய் கூறுகையில், ”ஓவைசிக்கு எதையும் நாங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஒவ்வொரு அமைப்பிலும் நல்லவர்களும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளனர் என்பதையே மம்தா பானர்ஜி கூற முற்பட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியை தோற்கடித்த நாங்கள், எங்களின் மதச்சார்பின்மையை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

 காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் விமர்சனம்

இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ”மம்தா பானர்ஜி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பாராட்டுவது இது முதல் முறை கிடையாது. அடல் பிகாரி பிரதமராக வகித்த காலத்தில் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருக்கிறார். இடதுசாரிகளின் அரங்காத்தை கவிழ்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை மம்தா பானர்ஜி நாடியிருக்கிறார். தேர்தலில் ஆதாயங்களை பெற இந்து அடிப்படைவாதிகளையும் முஸ்லீம்களையும் என இரு தரப்பினருடனும் இணக்கமாக சென்றிருக்கிறார். மம்தா பானர்ஜியின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது” என்றார்.

 மம்தா பானர்ஜியின் சான்றிதழ் தேவையில்லை

மம்தா பானர்ஜியின் சான்றிதழ் தேவையில்லை

அதேபோல், சிபிஐ(எம்) கட்சியின் சுஜன் சக்ரபோர்த்தி மம்தாவை கடுமையாக சாடியிருக்கிறார். சுஜன் சக்ரபோர்தி கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தயாரிப்பு தான் மம்தா என்பது அவரது கருத்து மூலமே நிரூபணம் செய்யப்பட்டுள்ளது” என்றார். பாஜக தேசிய துணைத்தலைவர் திலிப் கோஷ், மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளார். திலிப் கோஷ் கூறுகயில், ”யார் நல்லவர், யார் கெட்டவர் என்று மம்தா பானர்ஜியின் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை. அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள். நாங்கள் மம்தாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.