பல்வேறு நல திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா சென்றுள்ளார். அங்கு கொச்சியில் பேசிய மோடி “”ஓணம் பண்டிகை காலத்தில் நான் கேரளா வந்திருப்பது உள்ளப்படியே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அன்பு நிறைந்த கேரள மக்களுக்கு எனது மனம் கனிந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”, “இந்தியாவை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். கடுமையான உழைப்பாளிகள் இருக்கும் மாநிலமான கேரளா இருக்கிறது. கேரளா இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியே லட்சியமாக கொண்டு மத்தியில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும், நம்பிக்கையையும் அச்சாரமாக கொண்டு பாஜக அரசு இயங்கி வருகிறது. இது மக்களுக்கான அரசு. இது உங்களுக்கான அரசு” எனப் பேசினார். பிறகு நரேந்திர மோடி பல்வேறு அரசு நிகழ்சிகளில் பங்கு கொள்ள உள்ளார் .
நரேந்திர மோடியின் கேரள வருகை பல்வேறு எதிர்பார்புகளை தாங்கி உள்ளது.