இன்று இந்திய பங்கு சந்தை இப்படித் தான் இருக்கும்.. எச்சரிக்கையா இருங்க!

சர்வதேச சந்தையில் நிலவிய பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், முந்தைய அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்டன. குறிப்பாக சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேலாகவும், நிஃப்டியும் நல்ல ஏற்றத்தில் காணப்பட்டது.

எப்படியிருப்பினும் கடந்த அமர்வானது விநாயகர் சதுர்த்தி என்பதால் இந்திய பங்கு சந்தைகள் விடுமுறையாகும். இதன் காரணமாக இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவின் ஜூன் காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதில் முதல் காலாண்டில் 13.5% என்ற அளவுக்கு இரு இலக்கில் வளர்ச்சி கண்டு உள்ளது.குறிப்பாக பல்வேறு துறைகளும் நல்ல வளர்ச்சி கண்டுள்ள நிலையில், சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம்?

கடந்த அமர்வானது விநாயகர் சதுர்த்தி என்பதால் இந்திய பங்கு சந்தைகள் விடுமுறையாகும்.எனினும் சர்வதேச சந்தைகள் பலவும் கடந்த அமர்வில் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறொப்பாக டவ் ஜோன்ஸ் 0.80% சரிவிலும், நஸ்டாக் 0.56%மும், எஸ் & பி 0.78%மும் சரிவினைக் கண்டன. ஆக அதன் எதிரொலி இன்று இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய சந்தைகள் நிலவரம்?

ஆசிய சந்தைகள் நிலவரம்?

இன்று காலை தொடக்கத்தில் ஜப்பானின் நிக்கி 1.61% சரிவிலும், ஹாங்காங் சந்தையும் பெரியளவில் மாற்றமின்றி சரிவிலும்ம் சீனாவின் ஷாங்காய் சந்தையும் 0.17% சரிவிலும் காணப்பட்டது. இதன் காரணமாக இந்திய சந்தையும் சற்று சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி
 

எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி

இன்றுஎஸ் ஜி எக்ஸ் நிஃப்டி அதிகாலை அமர்வில் 70 புள்ளிகள் குறைந்து, 17451 ஆக உள்ளது. இது இன்று இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சரிவில் இருக்கலாம் என்பதையே காட்டுகின்றது.

நிஃப்டி முக்கிய லெவல்கள்

நிஃப்டி முக்கிய லெவல்கள்

நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் 17,522 – 17,623 ஆகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 17,965 – 17,992 புள்ளிகளாகவும் இருக்கலாம் என கணித்துள்ளனர். இதே பேங்க் நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் 38,800 ஆகவும், இதனை அடுத்து வலுவான சப்போர்ட் லெவல் 38,500 ஆகவும் உள்ளது. இதே உடனடியான ரெசிஸ்டன்ஸ் லெவல் 40,300 ஆகவும், இதனை உடைத்து சென்றால் 40,500 ஆகவும் செல்லலாம்.

 கால் &  புட் ஆப்சன் டேட்டா

கால் & புட் ஆப்சன் டேட்டா

சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்து வரும் நிலையில் கால் ஆப்சன் டேட்டா மற்றும் புட் ஆப்சன் என்பது நல்ல லாபகரமானதாக இருந்தாலும், மிக கவனமுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இதன் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.

 கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

எடுரன்ஸ் டெக்னாலஜிஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ் மற்றும் எனர்ஜி, ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்டீல், கிளான்ட் பார்மா, கேப்ரி குளோபல் கேப்பிட்டல், ஈச்சர் மோட்டார்ஸ், மெட்ரோ பிராண்ட்ஸ், நஷாரா டெக்னாலஜி, டாடா மோட்டார்ஸ், சிப்லா, சன்டெக் ரியால்டி, கிளேன்மார்க் பார்மா, ஐனாக்ஸ், ஜீ எண்டர்டெயின்மெண்ட் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க பட வேண்டிய பங்குகளாக உள்ளன.

 அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

ஆகஸ்ட் 30 நிலவரப்படி, என் எஸ் இ தரவுகளின் படி அன்னிய முதலீடானது 4165.86 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 656.72 கோடி ரூபாய் மதிப்பிலானபங்குகளை வாங்கியுள்ளனர்.

 எஃப் & ஓ தடை

எஃப் & ஓ தடை

எஃப் & ஓ தடை பட்டியலில் தற்போது வரையில் எந்த பங்கும் கிடையாது. பொதுவாக ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்படும். இந்த பங்குகள் மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Trade setup for Thursday: Top 10 things to know before opening bell

Trade setup for Thursday: Top 10 things to know before opening bell /இன்று இந்திய பங்கு சந்தை இப்படித் தான் இருக்கும்.. எச்சரிக்கையா இருங்க!

Story first published: Thursday, September 1, 2022, 7:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.