இன்று முதல் இந்த 20 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வருகின்றது கட்டண உயர்வு

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 53 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ஆண்டிற்கு ஒரு முறை சுங்கக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்த நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று மற்ற சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த இடி: தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில்  கட்டண உயர்வு | The tariff hike at 21 tollgates in Tamil Nadu came into  effect from Wednesday ...
விக்கிரவாண்டி – திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு – திண்டுக்கல் புறவழிச்சாலை – சமயநல்லூர், மனவாசி – திருச்சி – கரூர் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கான கட்டணம் 90 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது . பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் 310 ரூபாயில் இருந்து 355 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.