AIADMK News: எந்த விதத்திலும் செல்வாக்கு இல்லாத தலைவர் ஓபிஎஸ். அதிமுகவைப் பற்றி பேச புகழேந்திக்கு தகுதி இல்லை. ஓபிஎஸ் உடன் இருக்கும் சில எம்எல்ஏக்கள் கூட இபிஎஸ் பக்கம் வர வாய்ப்புள்ளது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவாக தான் உள்ளனர் என குடியாத்தத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கடுமையாக சாடியுள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உதவி செய்வதாகக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியாத்தம் வந்த கே.பி. முனிசாமி பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர், இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைந்து கட்சியை விட்டு நீக்க பட்டவர் தான் புகழேந்தி அவர் இப்போது எந்த கட்சியில் உள்ளார் தற்போது ஓபிஎஸ் அருகாமையில் இருந்து கொண்டு அதிமுகவை விமர்சித்து வருகிறார் புகழேந்திக்கு அதிமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. நானும் பதவியை ராஜினாமா செய்கிறேன். இபிஎஸ்யும் பதவியை ராஜினாமா செய்து விட்டு வாங்கள் ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று ஓபிஎஸ் பேசி இருக்கிறார் இது கட்சியின் தலைமையில் இருந்தவர் பேசுவது போல் இல்லாமல் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் பேச்சாளர் மேடையில் பேசுவது போல் இருக்கிறது.
கட்சி ஒரு தனிநபருக்கும் ஒரு குடும்ப கட்டுப்பாட்டுக்குள் கட்சி சென்று விடக்கூடாது என்று அன்று கூறி தான் தர்ம யுத்தம் நடத்தினீர்கள் நானும் உங்களுடன் இருந்தேன் கட்சியில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று சொன்னவர் இன்று அவருடன் பேசுவேன் அவர்களை சேர்த்துக் கொள்வேன் என்று ஏன் சொல்கிறார்? எனக் கேள்வி எழுப்பிய அவர், எந்தவிதமான செல்வாக்கும் இல்லாதவர் தான் ஓபிஎஸ் எனக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு மாற்றான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அதனாலதான் ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் கூட மறைமுகமாக பல்வேறு வகையில் ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருக்கிறார். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள எடப்பாடி அரசியலில் உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒருசாராராக உள்ளனர் என்றார்.
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், 30, 40, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடுவார்கள் என்று ஆளுங்கட்சியினர் ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரங்கள் செய்து, தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். ஓபிஎஸ் உடன் இருக்கும் சில எம்எல்ஏக்கள் கூட இபிஎஸ் பக்கம் வர வாய்ப்புள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவாக தான் உள்ளனர் என செய்தியாளர்களிடம் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனிசாமி கூறினார்.