தங்க நகைகளுடன் சேர்த்து புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம்.
6500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என கண்டுபிடிப்பு.
ருமேனியாவில் உள்ள கல்லறையில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும் கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் இதை கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் உடல் எலும்புகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட போது உடன் இந்த நகைகள் சேர்ந்து புதைக்கப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் கேப்ரியல் மொய்சா கூறியுள்ளார்.
எலும்புக்கூட்டின் அளவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சங்கள் ஒரு பெண்ணுடையது என அடையாளம் கண்டுள்ளனர்.
அப்பெண் நல்ல உயரமானவராக இருந்திருக்கிறார், மேலும் அவர் இறக்கும் போது பற்கள் நல்ல நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
Tarii Crisurilor Museum
அதாவது அவர் மிகுந்த செழிப்பான வாழ்க்கையை சொகுசாக வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.
இந்த கண்டுபிடிப்புகளை ஒரு “அற்புதமான கண்டுபிடிப்பு” என முன்னணி தொல்பொருள் ஆய்வாளர் கெலின் கெமிஸ் கூறுகிறார்.
இதுபோன்ற புதையல் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இனி கிடைக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடிகள் மதிப்புடைய பொக்கிஷங்களுடன் புதைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Ţării Crişurilor Museum, Oradea, Romania