சென்னை பூக்கடையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ஒரு கோடியே 85 லட்சம் ஹவலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மன்னடியைச் சேர்ந்த அம்ஜத் கான், நாரவாரி குப்பத்தைச் சேர்ந்த சேக்தாவுது ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் மண்ணடியில் உள்ள நகைக்கடைக்கு எடுத்து சென்று நகைக்கடை அதிபரிடம் தெரிவித்து தொகையை உறுதிப்படுத்தி கொண்டது தெரிய வந்தது. அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.