ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்க் ஆர்டர்.. குஷியில் அசோக் லேலண்ட்!

இந்துஜா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஒரு ஆர்டரின் மதிப்பு மட்டும் 75.15 மில்லியன் டாலர் என தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பேருந்து உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் 55 இருக்கைகள் கொண்ட ஃபால்கான் பேருந்து மற்றும் 32 இருக்கைகள் கொண்ட ஓயஸ்டர் பேருந்துகளை இந்த ஆர்டரின் பேயரில் தயாரித்து வழங்க உள்ளது.

செப்டம்பர் 1 முதல் ஐந்து முக்கிய மாற்றங்கள்.. லாபமா? நஷ்டமா?

மிகப் பெரிய ஆர்டர்

மிகப் பெரிய ஆர்டர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான கட்டளைகளைப் பெற்றுள்ள அசோக் லேலண்ட், ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக இவ்வளவு பெரிய ஆர்டரை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சென்னை - ஐக்கிய அரபு அமீரகம்

சென்னை – ஐக்கிய அரபு அமீரகம்

சென்னை – ஐக்கிய அமீரகம் அஷோக் லேலண்ட் தொழிற்சாலைகள் இதை இணைந்து தயாரிக்கின்றன. முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்க உள்ள அசோக் லேலாண்ட் 55 சதவீத உதிரிப்பாகங்கள், வடிவமைப்பு மற்றும் தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் எஹ தெரிவித்துள்ளது.

4000 பேருந்துகள்
 

4000 பேருந்துகள்

ராஸ் அல் கைமா ஆலையானது அசோக் லேலண்ட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல் கைமா முதலீட்டு ஆணையம் (RAKIA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஆண்டுக்கு 4,000 பேருந்துகளை நிறுவும் திறன் கொண்ட அலையாக இது உருவாகியுள்ளது.

ஆப்ரிக்க

ஆப்ரிக்க

2008-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலையிலிருந்து 25,500 பேருந்துகளை உற்பத்தி செய்து ஆப்ரிக்க நாடுகளுக்கு அசோல் லேலண்ட் ஏற்றுமதி செய்துள்ளது.

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

அசோக் லேலாண்ட் வளைகுடா நாடுகளில் 7000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை விற்றுள்ளது. தினமும் 18 மில்லியன் பயணிகள் அசோக் லேலாண்ட் பேருந்துகளில் பயணிக்கின்றனர். மேலும் வணிக வாகனங்கள் “பார்ட்னர் டிரக்” மற்றும் “காசல் பேருந்துகளையும் அசோக் லேலாண்ட் உற்பத்தி செய்து விற்று வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ashok Leyland Got for 1,400 school buses Order in UAE

Ashok Leyland Got for 1,400 school buses Order in UAE | ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்க் ஆடர்.. குஷியில் அசோக் லேலண்ட்!

Story first published: Thursday, September 1, 2022, 19:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.