ஐரோப்பாவில் உயர்கல்வி – 4|ஜெர்மனியில் உயர்கல்வி வாய்ப்புகள் – விண்ணப்பிப்பது எப்படி?

ஜெர்மன் நாட்டுக் கல்வி நிறுவனங்கள், 1) பல்கலைக்கழகங்கள் – Universities, 2) பயனுறு அறிவியல் பல்கலைக்கழகங்கள் – University of Applied Sciences, 3) கலை, இசை, திரைக்கலை பல்கலைக்கழகங்கள் (Universities for Art, Film and Music) என வகைப்படும்.

கிட்டத்தட்ட 400 அரசுசார் கல்வி நிறுவனகள், அவற்றில், 110 பல்கலைக்கழகங்கள், 230 பயனுறு அறிவியல் பல்கலைக்கழகங்கள், கிட்டத்தட்ட 10000 பொதுநிதி ஆராய்ச்சி மையங்கள்/நிறுவனங்கள், இசை, கலை, திரைக்கலைக்கென 50 கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழகங்கள் கோட்பாட்டு அறிவியல்/ தொழிற்நுட்பங்களையும், பயனுறு அறிவியல் பல்கலைக்கழகங்கள், செய்முறை விளக்கங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆராய்ச்சிகளுக்குத் தேவையான பயன்பாட்டு வடிவிலானவை என வகுக்கப்பட்டிருக்கும்.

ஜெர்மன்

கிட்டத்தட்ட 120 தனியார் பல்கலைக்கழகங்களில் பெரும்பான்மையானவை பயனுறு அறிவியல் பல்கலைக்கழகங்களே. 165 பெருநகரங்கள்/ மாநகரங்கள்/ நகரங்களில் வீற்றிருக்கும் இப்பல்கலைக்கழகங்கள் தோராயமாக 15000ற்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தோராயமாக, 1300ற்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இவற்றில் எல்லாமுமாக , 2020-2021 காலக்கட்ட பல்கலைக்கழகங்களின் பதிவின் படி கிட்டத்தட்ட 412000 பன்னாட்டு மாணவ, மாணவிகள் கல்விப்பயின்று என DAAD Database தகவல்கள் தெரிவிக்கின்றன. *DAAD – German Academic Exchange Service. இவற்றில் எண்ணிக்கையளவில் இந்திய மாணவ, மாணவிகள் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கணக்கின்படி, தோராயமாக 21,000 இந்திய மாணவ, மாணவிகள் ஜெர்மனியில் கல்விப்பயின்று வருகின்றனர் (The economic Times Mar 2022).

ஜெர்மன் கல்வி முறை:

பல நூற்றாண்டுகளாக, ஜெர்மன் நாட்டில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்பே இருந்து வந்தது. தற்போது, பல மாற்றங்கள் கண்ட, கல்வியமைப்பில், 3 அல்லது 4 ஆண்டுகள் இளநிலையும் 2 ஆண்டுகள் முதுநிலைப்பட்டப்படிப்பும், 5 அல்லது 6 ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்பும் பல்கலைக்கழகங்கள் வழங்குகிறது. கல்வித்திட்டம், பாடங்களின் அமைப்பு, பட்டப்படிப்பின் அடிப்படை, பல்கலைக்கழக விதிமுறைகள் ஆகியவைகளைப் பொறுத்து, விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள், தாங்கள் ஏற்கனவே நிறைவு செய்திருக்கும் செய்முறைத் திட்டம் (academic projects/research activities), தொழிற்முறை செயற்பாடுகள் (vocational activities), நிறுவனங்களிலோ, ஆராய்ச்சி மையங்களிலோ, தொழிற்சாலைகளிலோ உள்ளிறுப்புப் பயிற்சிகள் (Internships) நிறைவுச்செய்திருப்பது அவசியமாகலாம்.

ஜெர்மன் பல்கலைக்கழகங்கள்

ஒருவேளை, இத்தகைய கல்வித்தகுதி பெறாதச் சூழலிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தடைப்படக்கூடாது என்பதற்காக, அடிப்படைக் கல்வியினை (Foundation courses) ஓராண்டுக்கு பல ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் வழங்குக்கின்றன. பயனுறு அறிவியல் பல்கலைக்கழகங்களில் கல்விக் கற்கும்பொழுது வட்டார வளர்ச்சிகளும், ஜெர்மன் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அடிப்படையான புத்தாகச் செயற்பாடுகளை (innovations) மாணவ, மாணவியர் முன்மொழிந்து, தொழிற்சாலைகளோடும், பன்னாட்டு நிறுவனங்களோடும் இணைந்து செயற்முறை கல்விக்கற்க வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

பன்னாட்டளவில் கல்விக்கற்று, தொழிற்சார் பயிற்சிகளும், வேலை அனுபவங்களும் அவரவர் நாட்டினில் ஆராய்ச்சி அனுபவங்களோடு வரும் பன்னாட்டு மாணவ, மாணவியர்களுக்கு ஜெர்மானியப் பல்கலைக்கழகங்கள் – ஜெர்மனின் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுத்திட்டத்தில் பலவகையான புது வாய்ப்புகளையும் நிதியுதவியும் செய்துக்கொடுக்கிறார்கள்.

கல்விக்கட்டணமும் வசதிகளும்:

ஜெர்மன் நாட்டுப் பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பெரும்பாலான மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள் இலவச இளநிலை பட்டப்படிப்பை வழங்குகின்றன. எனினும் மிகக் குறைந்த அளவிலான கல்விச்சங்கக்கட்டணமும் இன்னபிற பல்கலைக்கழக, சமுதாயக் கட்டணங்களும் இருக்கலாம். இவற்றின் வழியாக, ஜெர்மனின் பொதுப்போக்குவரத்தினை இலவசமாகப் பயன்படுத்தும் வசதிகளும் உண்டு. சில பல்கலைக்கழகங்கள் ஜெர்மன் மொழித் தேர்வில் குறிப்பிட்ட இலக்கை அடைந்திருப்பது அவசியம் என்று வகுத்திருக்கிறார்கள். ஜெர்மனின் மாநிலங்கள், பல்கலைக்கழகங்கள், இளநிலை/முதுநிலை உள்ளிட்டவைகளைப் பொறுத்து, ஆங்கிலத் தகுதித்தேர்வு மட்டும் போதுமா அல்லது ஜெர்மன் மொழித் தேர்வுத் தேர்ச்சியும் அவசியமா என்பதும் மாறுபடும்.

1.ஜெர்மன் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்:

ஜெர்மன் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பற்றி அறிய கீழே உள்ள இணையதளம் செல்க:

  1. ஜெர்மன் பல்கலைக்கழகத் தரவரிசை

நோர்வே நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தர வரிசை பற்றி அறிய:

3. பட்டப்படிப்பு நுழைவு விதிமுறைகள்

அடுத்ததாக, இளநிலை மற்றும் முதுநிலை கல்விக்கான அனுமதி விதிமுறைகள் குறித்து அறிய,

ஜெர்மன்

3அ) இளநிலைப் பட்டப்படிப்புகள்:

ஒவ்வொரு மாநிலங்களும் சில அடிப்படை மாறுதல்களை தத்தமது மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கென வரையறுத்து வைத்திருந்தாலும், பொதுவாக,

அ) இளநிலைக் கல்வியில் சேர்வதற்குரிய அவரவர் நாட்டினில் இருக்கும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

ஆ) ஒருவேளை, பல்கலைக்கழகங்கள் வீற்றிருக்கும் மாநிலங்களில் ஏதேனும் தனித்தகுதியோ, அடிப்படை அறிவுப்புலமையோ தேவை என விதிகள் வைத்திருந்தால், அதனை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

இ) ஜெர்மன் மொழிப் புலமை/ஆங்கில மொழிப் புலமைச் சோதனை குறித்து பல்கலைக்கழகங்கள் விதித்திருக்கும் அடிப்படைத் தகுதியினை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

3ஆ) முதுநிலைப் பட்டப்படிப்புகள்:

அ) இளநிலைக் கல்வியில் சேர்வதற்குரிய அவரவர் நாட்டினில் இருக்கும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

ஆ) ஒருவேளை, பல்கலைக்கழகங்கள் வீற்றிருக்கும் மாநிலங்களில் ஏதேனும் தனித்தகுதியோ, அடிப்படை அறிவுப்புலமையோ தேவை என விதிகள் வைத்திருந்தால், அதனை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

இ) ஜெர்மன் மொழிப் புலமை/ஆங்கில மொழிப் புலமைச் சோதனை குறித்து பல்கலைக்கழகங்கள் விதித்திருக்கும் அடிப்படைத் தகுதியினை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

4. கல்விக்கட்டணம்:

கல்விக்கட்டணத்தைப் பொறுத்தவரை, தனியார் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் இந்திய ரூபாயில் 5 லட்சங்கள் முதல் 16 லட்சங்கள் வரை என நிர்ணயித்து இருக்கிறார்கள். அரசு பல்கலைக்கழகங்கள், அரசு நிதியுதவிப் பட்டப்படிப்புகளில் 300 யூரோ முதல் 3500 வரையில் கூட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டக்கல்வியைப் பொறுத்தவரை 7.5 லட்ச ரூபாய் முதல் 17 லட்ச ரூபாய் வரை கல்விக்கட்டணம் உள்ளது.

MBA போன்ற மேலாண்மைக் கல்வியியல் வருடத்திற்கு 7.5 லட்சங்கள் முதல் 25 லட்சங்கள் வரையிலும் கூட கல்விக்கட்டணம் உள்ளது. மாநிலங்களுக்கு ஏற்ப சிறு மாறுதல்களும் இருக்கலாம். உதாரணமாக, Baden-Wurttemberg, Bavaria, Hamburg, and Lower Saxony ஆகிய மாநிலப் பல்கலைக்கழகங்கள் வருடத்திற்கு 40,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை கல்விக்கட்டணச் செலவு ஆகிறது. ஏனைய மாநிலங்களில் கல்விக்கட்டணம் இலவசம் மற்றும் ஏனையச் செலவுகள் 4000 முதல் 10000 ரூபாய் வரை ஆகிறது.

5. ஜெர்மன் மற்றும் ஆங்கிலப்புலமைத் தேர்வு

தனியார் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, பள்ளிக்கல்வியும், உயர்கல்வியும் ஆங்கிலத்தில் நிறைவு செய்திருந்தால் போதுமென விதி வைத்திருக்கிறார்கள். சில பல்கலைக்கழகங்கள், இணையத்தின் வழியே ஆங்கிலப் புலமைச் சோதனையை நிறைவு செய்து, அதன் சான்றிதழ் அளித்தால் போதும் என்கின்றனர் (உதாரணமாக, )

ஏனையப் பல்கலைக்கழகங்கள், கீழே உள்ள விதிகளின் அடிப்படையில் ஆங்கிலப்புலமைச் சோதனையை வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.

6 வருடப் பள்ளிப்படிப்பில் ஆங்கில மொழிப் பாடம் படித்துத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும், அல்லது, பன்னாட்டு ஆங்கிலப் புலமைச் சோதனையில், (IELTS (5.5, 6.0, 6.5), Cambridge Examinations: B2 First (earlier FCE), C1 Advanced (earlier CAE), C2 Proficiency (earlier CPE), TOEFL: TOEFL iBT (94-72); TOEFL PBT (626-543); TOEFL ITP Level 1 (626-543), UNIcert® II, Telc B2-Zertifikat, Pearson PTE Academic 75 – 59, TOEIC: TOEIC Listening and Reading Test (944-785); TOEIC Speaking Test (179-160); TOEIC Writing Test (179-150)) உள்ளிட்டத் தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்களில், ஜெர்மன் மொழிப் புலமைச் சோதனையில் A2 தகுதியினை நிறைவு செய்திருத்தல் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

ஜெர்மன்

6. விண்ணப்பிக்கும் முறை

இவையனைத்தையும் அறிந்த பின் விண்ணப்பங்கள் குறித்தும் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் அறிந்துக்கொள்ளல் வேண்டும். பல பல்கலைக்கழகங்கள் UNIASSIST என்ற வலைத்தளத்தின் வழியே விண்ணப்பங்களை பெறுகின்றன,

ஏனைய தகவல்களை கீழே உள்ள இணைய முகவரியிலும் பெறலாம்

விண்ணப்பக்கட்டணமாக 75 யூரோ, அதாவது தோராயமாக 6250 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரையில் கூட ஆகலாம்.

தனியார் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே சில நடைமுறைகளையும் விதிமுறைகளையும் வகுத்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, எங்கள் Mullai Academia International Pvt Ltd புரிந்துணர்வு ஒப்பந்தம் வைத்துள்ள University of Europe for Applied Sciences பல்கலைக்கழகம் GUS Global system வழியே எங்களைப் போன்ற கல்வி ஆலோசனை நிறுவனத்திற்கென்று தனியே பதிவேற்றப்பக்கங்களை வைத்திருக்கிறார்கள். இதன் வழியே உலகின் 20ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் கூட்டாக இணைந்து விண்ணப்பங்களைப் பெறுகின்றனர்.

7. விண்ணப்பிக்கும் நாட்கள்:

பொதுவாக, ஜூலை 15ம் ஜனவரி 15ம் என இருமுறை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனாலும், சில பட்டப்படிப்புகள், சில பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பங்களைப் பெறுகின்றன.

உதாரணமாக, முதுநிலை சட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு தருணங்களில் பெறுகின்றன. ஜனவரி, மார்ச், ஜூன், அக்டோபர், நவம்பர் என அவை மாறுபடுகின்றன. அடுத்த உதாரணமாக, நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் வைத்துள்ள University of Europe for Applied Sciences பல்கலைக்கழகம் MBA பட்டப்படிப்பிற்கு ஜனவரி, மார்ச், ஜூன், செப்டம்பர் என நான்கு முறை விண்ணப்பங்கள் பெறுகின்றனர்.

ஜெர்மன் பல்கலைக்கழகம்

8. வாழ்க்கைச் செலவு:

ஏனைய நாடுகளைப் போலவே, ஜெர்மன் நாடும் தமது நாட்டிற்கு வரும் மாணவ, மாணவிகள் பொருளாதாரச் செலவினால் பாதிகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, வருடாந்திரச் செலவிற்காக 10, 332 யூரோக்கள் (தோராயமாக 8.5 லட்சங்கள் ரூபாய்) குறிப்பிட்ட வங்கியில் வைப்பாக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, Kotak Mahindra Bank, Deutsche Bank, Capital India Finance Ltd., போன்ற வங்கியில் வைப்பாக வைக்கும் தொகை, ஜெர்மனியில் கல்விக்கற்று வாழ்ந்து வரும்பொழுது, மாதமாதம் 861 யூரோக்கள் (தோராயமாக 70000 ரூபாய்) செலவிற்காக விடுவிக்கப்படும்.

9. மாணவ நுழைவிசைவு (Student Visa)

இந்திய மாணவ, மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கான மாணவ நுழைவிசைவினை விண்ணப்பிக்க, சில அடிப்படை ஆவணங்கள் தயாரித்து வைத்திருத்தல் வேண்டும், கீழே உள்ள இணைய முகவரியில் விளக்கங்கள் உள்ளன.

ஜெர்மன்

10. ஜெர்மன் நாட்டு கல்வி ஊக்கத்தொகை

ஜெர்மன் நாட்டினைப் பொறுத்தவரை பல்வேறு பாடத்திட்டங்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள், அனைத்து மாநிலங்களுக்குமென வழங்கப்படும் ஊக்கத்தொகையில் பெரும் எண்ணிக்கையிலான நிதி மற்றும் வாய்ப்புகளை DAAD என்ற சேவை நிறுவனத்தின் கீழ் வகைப்படுத்தி வைத்துள்ளனர். ()

அவை மட்டுமின்றி, பல்வேறு சேவை மற்றும் கல்வி நிறுவனங்களும் தனித்தனியே பன்னாட்டு மாணவ, மாணவிகளுக்கென ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றன (Heinrich Böll Foundation Scholarships, DeutschlandStipendium National Scholarship Programme, Konrad-Adenauer-Stiftung Scholarships).

இவைகளோடு, மாணவிகளுக்கென சில ஊக்கத்தொகைகள் வழங்கபடுகின்றன, உதாரணமாக, ESMT Berlin இல் MBA படிக்கும் மாணவிகளுக்கு 30% முதல் 100% வரையிலான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

11. ஜெர்மன் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

  • Hochschule Mannheim –University of Applied Sciences

  • Karlsruhe Institute of Technology

  • Berlin International University of Applied Sciences

  • Bremen University of Applied Sciences

  • Jacobs University

  • Technische Universitat Munchen

  • University of Gottingen

  • Max Planck Institute

  • Freie Universitat Berlin

  • Technische Universitat Dresden

  • Munich University of Applied Sciences

  • University of Bonn

  • Saarland University

  • Frankfurt School of Finance & Management

  • Technische Universitat Kaiserslautern

  • Universitat Hamburg

  • ULM University

  • HHL Leipzig Graduate School of Management

  • University of Bayreuth

  • WHU-Otto Beisheim School of Management

  • University of Stuttgart

  • RWTH Aachen University

  • HTW Berlin

  • Technische Universitat Berlin

  • TU Darmstadt

  • University of Hohenheim

  • University of Erfurt

  • University of Freiburg

– முனைவர் விஜய் அசோகன், சுவீடன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.